• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ராகுல் திராவிட் சீனியர் அணிக்கு கோச் ஆக மாட்டார் ஏன் தெரியுமா?

ராகுல் திராவிட் சீனியர் அணிக்கு கோச் ஆக மாட்டார் ஏன் தெரியுமா?

ராகுல் திராவிட்

ராகுல் திராவிட்

ராகுல் திராவிட் இளம் வீரர்களை வைத்து பிரமாதமாக ஒரு அணியை தயார் படுத்தியுள்ளதும் ராகுல் திராவி இந்திய அணி சீனியர் அணியின் பயிற்சியாளராக வேண்டும் என்ற குரல்களும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

  • Share this:
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் தோற்றதிலிருந்தே ரசிகர்களுக்கு கிரிக்கெட் பண்டிதர்களுக்கு அதிருப்தி நிலவுகிறது. அதுவும் குறிப்பாக ராகுல் திராவிட் இளம் வீரர்களை வைத்து பிரமாதமாக ஒரு அணியை தயார் படுத்தியுள்ளதும் ராகுல் திராவி இந்திய அணி சீனியர் அணியின் பயிற்சியாளராக வேண்டும் என்ற குரல்களும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

ஆனால் ராகுல் திராவிட் ஏற்கெனவே சீனியர் அணியின் பயிற்சியாளராக மாட்டேன் என்று கூறியிருக்கிறார். சீனியர் அணியில் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர் தலைகள் இருக்கும் போது ராகுல் திராவிட் பயிற்சியாளராவதை விரும்ப மாட்டார். ஏனெனில் ஏற்கெனவே இந்தியாவின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் தலைசிறந்த ஸ்பின்னர், கேப்டன் அனில் கும்ப்ளே பயிற்சியாளரான போது கோலிக்கும் அவருக்கும் ஏற்பட்ட சர்ச்சை பெரிதாகி கடைசியில் கும்ப்ளேயின் பெருந்தன்மையினால் கோலியின் மதிப்பு மரியாதை காப்பாற்றப்பட்டதை நாம் அறிவோம்.

Also Read: நான் ஒரு பிராமின் என்று கூறிய சுரேஷ் ரெய்னா- சமூக ஊடகங்களில் கடும் விமர்சனம்

அனில் கும்ப்ளே ஒரு கண்டிப்பான ஒழுக்கவாதி, கட்டுக்கோப்பை அதிகம் எதிர்பார்ப்பவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2017 உள்நாட்டு தொடரில் காயமடைந்த நிலையில் அணியில் ஆடுவேன் என்று அடம்பிடித்தார் கோலி, ஆனால் உடல் தகுதியில் கண்டிப்பான கும்ப்ளே ரகானேயை பொறுப்பு கேப்டனாக்கி அந்தத் தொடரை ரகானே தலைமையில்தான் இந்திய அணி வென்றது, இது போக கும்ப்ளேவுக்கும் கோலிக்கும் ஏகப்பட்ட பிரச்னைகள் இருந்திருக்கிறது போலும், இது தொடர்பாக எதுவும் அதிகாரபூர்வ தகவல்கள் இல்லை என்றாலும் குல்தீப் யாதவை அணியில் எடுப்பது உட்பட கும்ப்ளேயின் பல முடிவுகளுக்கு கோலி முட்டுக்கட்டை போட்டார், அவர் எடுத்த சில முடிவுகளுக்கு கும்ப்ளேவும் செவிசாய்க்காத நிலை இருந்ததால் தினசரி பிசிசிஐ-க்கு மெசேஜ் அனுப்பி கும்ப்ளேயை தூக்க வேண்டும் என்று கோலி அனுப்பினார்.கடைசியில் கும்ப்ளே விட்டுக் கொடுத்தார், வரலாற்றாசிரியரும் கிரிக்கெட் விமர்சகருமான ராமச்சந்திர குகா, கோலியைக் கேட்டுத்தான் அணித்தேர்வுக்குழுவையே தேர்வு செய்யும் போக்கு விரைவில் வரும் என்றும் வர்ணனையில் யார் இருக்க வேண்டும் என்பதையும் அவரே முடிவெடுப்பார் என்றும் சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது. கோலிக்கு அவ்வளவு பவர் கொடுத்து வைத்துள்ளனர். இந்த நிலையில் ராகுல் திராவிட் தன் சக வீரர் கும்ப்ளேவுக்கு நடந்தது தனக்கு நடக்க அனுமதிக்க மாட்டார்.

மேலும் ரவிசாஸ்திரிக்கும் கோலிக்கும் இருப்பதாகக் கூறப்படும் ‘கெமிஸ்ட்ரி’ என்பது ஒரு போங்கு, கோலி சொல்வதற்குத் தலையாட்டி பொம்மையாக அவர் இருக்கும் வரை ரவிசாஸ்திரியை தூக்க கோலி அனுமதிக்க மாட்டார். ஏற்கெனவே பவுலிங் பயிற்சியாளராக ஜாகீர் கான் வருவார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் பாரத் அருண் என்று ரவி சாஸ்திரி முடிவெடுத்ததை கோலி ஒப்புக் கொண்டார். இப்படிப்பட்ட கெமிஸ்ட்ரி சத்தியமாக ராகுல் திராவிடுக்கும், கோலிக்கும் சாத்தியமில்லை என்றே கூறலாம். தன்னை அசைத்துப் பார்க்கும் எந்த சக்தியையும் கோலி அனுமதிக்க மாட்டார் என்றே கிரிக்கெட் தரப்பில் கூறப்படுகிறது.இன்னொன்று எப்போதும் இருக்கும் செண்டிமெண்ட் ரவிசாஸ்திரி-கோலி காம்பினேஷன் பல வித்தைகளை செய்திருப்பதாக வட இந்திய ஊடகங்களும் கூறுகின்றன, ரவிசாஸ்திரியுமே கூட இது போன்ற இந்திய அணி ஒருபோதும் இருந்ததில்லை என்று சுயதம்பட்டம் அடித்துக் கொள்ளத் தொடங்கினார். பொதுவாக இந்திய செண்டிமெண்ட் வெற்றிக் கூட்டணியை மாற்றக்கூடாது என்பதே, அதனாலும் ராகுல் திராவிட் வருவது கடினம்.

அனைத்திற்கும் மேலாக பயிற்சியாளர் ஒருவரின் தேவை 16-19 வயது கிரிக்கெட் வீரர்களுக்குத்தான் அவசியம். யு-16, யு-19 மட்டத்தில் திராவிட் போன்றவர்கள் இருப்பதனால்தான் இந்தியாவின் தற்போதைய பெஞ்ச் ஸ்ட்ரெந்த் பிரமாதமாக உள்ளது. சீனியர் மட்டத்தில் கோச் என்பது இப்போது ஒரு ஃபேஷனாகி விட்டது. மற்றபடி கேப்டன் தான் அணிக்கு முக்கியம் என்று அடிக்கடி இயன் சாப்பல் கூறுவார்.

ஆகவே ராகுல் திராவிட் இளம் வீரர்களுக்கு பயிற்சியளித்து அவர்களை உருவாக்குவதை பெருமையாகவும் கடமையாகவும் மகிழ்ச்சியாகவும் செய்து வரும் நிலையில் சீனியர் அணி என்ற அரசியலுக்குள் அவர் பயிற்சியாளராக வர வாய்ப்பில்லை என்றே கிரிக்கெட் வட்டாரங்கள் கூறுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Muthukumar
First published: