ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

டிக்ளேர் சரிதான்! நியூசிலாந்தை குறைத்து மதிப்பிட வேண்டாம்- ராகுல் திராவிட் ஓபன் டாக்

டிக்ளேர் சரிதான்! நியூசிலாந்தை குறைத்து மதிப்பிட வேண்டாம்- ராகுல் திராவிட் ஓபன் டாக்

இந்தியா - நியூசிலாந்து கான்பூர் டெஸ்ட் ட்ரா.

இந்தியா - நியூசிலாந்து கான்பூர் டெஸ்ட் ட்ரா.

இந்தப் பிட்சில் தரமான பவுலிங், பேட்டிங் இரண்டையும் இரு அணிகளுமே வெளிப்படுத்தியதினால் இந்த மந்தமான பிட்சிலும் ஒரு விறு விறு டெஸ்ட் போட்டி நடந்தது. இல்லையெனில் ஒரு மந்தமான டிராவையே நாம் பார்த்திருப்போம்” என்று நீண்ட விளக்கம் அளித்தார் ராகுல் திராவிட்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  கான்பூர் டெஸ்ட் போட்டி டிரா ஆனதையடுத்து இந்திய அணி 4ம் நாள் ஆட்டத்தை இன்னும் முன் கூட்டியே டிக்ளேர் செய்திருக்க வேண்டுமோ என்று பலரும் பேசி வரும் நிலையில் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிட் டிக்ளேர் செய்தது சரிதான் என்றும் ஆல் அவுட் ஆகியிருந்தால் நியூசிலாந்து வெற்றி பெறவே அது வாய்ப்பாக அமைந்திருக்கும் என்றார்.

  மேலும் அக்சர் படேல், விருத்திமான் சாஹா இன்னும் கொஞ்சம் அடித்து ஆடியிருந்தால் நிச்சயம் ஒருவேளை இன்னும் அரைமணி 4ம் நாள் ஆட்டத்தில் கூடுதலாக கிடைத்திருக்குமோ என்ற கேள்விக்கும் ராகுல் திராவிட், “அப்படி நான் நினைக்கவில்லை, ஆட்டத்தை பற்றிய என்னுடைய வாசிப்பு அது அல்ல. அப்படி டிக்ளேர் முன்கூட்டியே செய்திருந்தால் நாமும் கடும் அழுத்தத்தில் இருந்திருப்போம், ஏனெனில் 3 முடிவுகளுமே சாத்தியம் என்ற நிலைதான் இருந்திருக்கும்” என்றார்.

  “நேர்மையாக உங்களிடத்தில் கூற வேண்டுமெனில், நாம் ஆல் அவுட் ஆகியிருந்தால், 3 விக்கெட்டுகள் சடுதியில் விழுந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் விருத்திமான் சாஹா கழுத்து வலியுடன் தைரியமாக இறங்கி ஆடினார். நாம் அந்த 3 விக்கெட்டுகளை இழந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் 110 ஓவர்களி நியூசிலாந்து 240 ரன்களை விரட்ட வேண்டி வந்திருக்கும். ஓவருக்கு 2.2. அல்லது 2.3 ரன்கள்தான் தேவைப்படும். எனவே ஆட்டம் பற்றிய என் வாசிப்பு அதுவல்ல, அக்சர் படேல், சாஹா பார்ட்னர்ஷிப் நமக்குத் தேவைப்பட்டது.

  ஷ்ரேயஸ் அய்யர் விக்கெட்டை தேநீர் இடைவேளைக்கு முன்பாக இழந்து விட்டோம். 167/7 என்பதிலிருந்து 230/7 மிகவும் அவசியமானது. பிட்சில் பந்துகள் பயங்கரமாகத் திரும்பி எழும்பியிருந்தாலோ மட்டையின் இரு விளிம்புகளிலும் பந்துகள் சீராக பட்டுக் கொண்டிருந்தாலோ, டிக்ளேரை முன் கூட்டியே செய்திருக்கலாம்.

  இந்த நிலையிலும் கூட எதிரணியினருக்கு ஓவருக்கு 3 ரன்களுக்கும் கீழ்தான் வெற்றிக்குத் தேவையாக இருந்தது. இரண்டு பேட்டர்கள் செட்டில் ஆகிவிட்டால் நிச்சயம் அவர்கள் வெற்றி பெறவே வாய்ப்பு ஆகியிருக்கும். எனவே டிக்ளேர் செய்தது சரியே. 4ம் நாள் ஒரு விக்கெட் எடுத்தோம், 5ம் நாள் நெருக்கமாக வந்து விட்டோம். 45 நிமிடம் முன்னால் டிக்ளேர் செய்திருந்த போதும் நாமும் கடும் அழுத்தத்தில் இருந்தோம், உண்மையில் அழுத்தத்தில் இருந்தோம், என்பதை மக்கள் மறந்து விடுகின்றனர்.

  பிட்ச் எப்படி இருந்ததென்றால் பந்துகள் தாழ்வாகவும் மெதுவாகவும் வந்ததே தவிர பெரிய பைட் இல்லை, எழும்பவில்லை. பந்துகள் திரும்பவும் இல்லை, அதாவது பொதுவாக இந்திய பிட்ச்களில் 4ம் நாள், 5ம் நாளில் மட்டையாளர்களின் இரண்டு எட்ஜும் ஆட்டத்துக்குள் வரும். இந்த டெஸ்ட் போட்டியில் மட்டையின் வெளி விளிம்பில் பட்டு ஸ்பின்னர்களுக்கு கேட்ச் ஆவது முற்றிலும் இல்லை. கடைசி நாளில் கூட எடுத்த எட்ஜ் எல்லாம் பீல்டர் கைக்குப் போகவில்லை முன் கூட்டியே விழுந்து விட்டது. ஒரே வழி எல்.பி.. பவுல்டு வகையில் தான் வீழ்த்த வேண்டும், அந்த நிலையில் ரன் வேண்டாம் வெறுமனே தடுத்தாடுவோம் என்று அவர்கள் ஆடும்போது விக்கெட் எடுப்பது கடினம்.

  இந்தப் பிட்சில் தரமான பவுலிங், பேட்டிங் இரண்டையும் இரு அணிகளுமே வெளிப்படுத்தியதினால் இந்த மந்தமான பிட்சிலும் ஒரு விறு விறு டெஸ்ட் போட்டி நடந்தது. இல்லையெனில் ஒரு மந்தமான டிராவையே நாம் பார்த்திருப்போம்” என்று நீண்ட விளக்கம் அளித்தார் ராகுல் திராவிட்.

  Published by:Muthukumar
  First published:

  Tags: India vs New Zealand, Rahul Dravid