ரிஷப் பண்ட் கேப்டன்சியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் 0-2 என்று பின்னடைவிலிருந்து எழுந்து 2-2 என்று ட்ரா செய்துள்ளோம் ஆகவே ரிஷப் பண்ட் கேப்டன்சியைப் பற்றி இப்போதைக்கு தீர்ப்பு எழுதாதீர்கள் என்று தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிட் ‘முட்டு’ கொடுத்துள்ளார்.
மேலும், அவர் கேப்டன் பொறுப்பை ஏற்ற காரணத்தால் அவர் தனது தனிப்பட்ட பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த திணறி வருவதாக விமர்சனம் எழுந்தது. தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் அவர் மொத்தம் 58 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார்.
மிடில் ஓவரில் இடதுகை அதிரடி வீரர் இருந்தால் சிறப்பாக இருக்கும். தனிப்பட்ட முறையில், அவர் இன்னும் சில ரன்கள் எடுக்க விரும்பி இருப்பார். ஆனால் அது பெரிய பிரச்சினை இல்லை. அவர் அடுத்த சில மாதங்களில் எங்களின் திட்டங்களில் மிகப் பெரிய பங்கு வகிக்கிறார்.
போட்டியின் மிடில் ஓவர்களில் அதிரடியாக விளையாடும் வீரர்கள் தேவை. அப்போதுதான் அணியின் ஸ்கோரை சற்று கணிசமாக உயர்த்த முடியும். அதிரடியாக ஆட நினைத்து ஒரு சில போட்டிகளில் பண்ட் ஆட்டமிழந்து இருக்கலாம். ஆனால் அவர் எங்கள் பேட்டிங் வரிசையின் ஒரு அங்கமாக இருக்கிறார், என்று அவரது டி20 பேட்டிங்கிற்கு முட்டு கொடுத்ததோடு அல்லாமல் கத்துக் குட்டி கேப்டன்சிக்கும் முட்டு கொடுத்து கூறும்போது,
“0-2 பின்னடைவிலிருந்து 2-2 என்று சமநிலைக்கு கொண்டு வந்து வெற்றி பெறும் நிலைக்குக்கொண்டு வந்தது நல்ல விஷயம்தானே. கேப்டன்சி என்பது வெறும் வெற்றி தோல்விகளை வைத்துத் தீர்மானிக்க முடியாது. அவர் ஒரு இளம் கேப்டன் ஒரு லீடராக வளர்ந்து வருகிறார்.
அவரது கேப்டன்சியை அதற்குள் தீர்ப்பிடக்கூடாது, ஒரு தொடரை வைத்து செய்யவே கூடாது. அவருக்கு நிறைய சுமைகள் உள்ளன, பேட்டிங், கீப்பிங், அதோடு கேப்டன்சியையும் நன்றாகவே செய்கிறார்” என்றார் ராகுல் திராவிட்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: India vs South Africa, Rahul Dravid, Rishabh pant, T20