ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

77 பந்துகளில் 205 ரன்கள்... டி20-ல் இரட்டை சதம் அடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்

77 பந்துகளில் 205 ரன்கள்... டி20-ல் இரட்டை சதம் அடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்

ரஷீம் கார்ன்வால் படம்

ரஷீம் கார்ன்வால் படம்

இதன் மூலம் டி20 போட்டிகளில் 175 ரன்கள் அடித்த கிறிஸ் கெய்லின் சாதனை தகர்த்துள்ளார் கார்ன்வால்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  அட்லாண்டா ஓபன் கிரிக்கெட் தொடரில் 77 பந்துகளில் 205 ரன்கள் அடித்துஅனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளார் மேற்கு இந்திய தீவுகள் அணி ஆல்ரவுண்டர் ரகீம் கார்ன்வால்.

  அமெரிக்காவில் அட்லாண்டா ஓபன் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. 16அணிகள் விளையாடும் இந்த தொடரிக் பரிசு தொகையாக 75ஆயிரம் டாலர் மட்டுமே வழங்கப்பட உள்ளது. பெரிதும் பிரபலமாகாத இந்த தொடரை தற்போது ஒற்றை ஆளாக பிரபலப்படுத்தியுள்ளார் மேற்கு இந்திய தீவுகள் அணி ஆல்ரவுண்டர் ரகீம் கார்ன்வால்.நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் களமிறங்கிய கார்ன்வால் அதிரடி சரவெடியாய் வெடித்தார். 77 பந்துகளை சந்தித்த இவர் 205 ரன்களை விளாசினார். இதில் 17 சிக்ஸர்களும் 22 பவுண்டரிகளும் அடங்கும். இதன் மூலம் டி20 போட்டிகளில் 175 ரன்கள் அடித்த கிறிஸ் கெய்லின் சாதனை தகர்த்துள்ளார் கார்ன்வால்.

  இதையும் படிங்க: பும்ராவிற்கு பதில் மாற்று வீரர் யார்? குழப்பத்தில் இருக்கும் இந்திய அணியில் இடம் பிடிக்கபோவது யார்? ஒர் அலசல்

  இந்த போட்டியில் இவரது ஸ்ரைக் ரேட் 266.77 ஆகும். 20 ஓவர்கள் முடிவில்  அட்லாண்டா ஃபையர் அணி ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்து 326 ரன்களை வாரி குவித்தது. இதனை இலக்கை துரத்தி விளையாடி அணி 176 ரன்களை வித்தியாசத்தில் கார்ன்வால் அணியிடம் தோல்வியை தழுவியது.

  இந்த நிலையில் கிரிக்கெட் உலகம் முழுவதும் கார்ன்வால் பற்றிய  பேச்சு தான் வைரலாக பரவி வருகிறது. மேற்கு இந்திய தீவுகள் அணிக்காக விளையாடி வரும் ரகீம் கார்ன்வால் கடந்த ஆண்டு, இந்தியா மற்றும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.

  Image
  ரகீம் கார்ன்வால்

  மேலும் மேற்கு இந்திய தீவுகள் நடத்தும் சிபிஎல் தொடர்களில் விளையாடி வரும் கார்ன்வால் பேட்டிங், பந்துவீச்சு அனைத்து திறமைகளையும் நிரூபித்து காட்டியுள்ளார்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Cricket, T20, West indies