ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி கோலியின் கேப்டன்சி குறித்த புகார்களை அதிகரிக்கும் தொடக்கப் புள்ளியாக அமைந்துள்ளது. பிசிசிஐ செயலர் ஜெய் ஷா-வை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரண்டு மூத்த வீரர்கள் கோலியின் கேப்டன்சி குறித்து புகார் தெரிவித்ததாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்கு முன்னால் ரவிசாஸ்திரியாகட்டும் கோலியாகட்டும் அந்த பெரிய போட்டியை மட்டம் தட்டி இது இன்னொரு டெஸ்ட் போட்டிதான் ஒன்றுமேயில்லை.. இந்த டெஸ்ட் போட்டியின் வெற்றி தோல்வி எங்களின் பெருமைகளை சாய்த்து விடாது, கடந்த 2, இரண்டரை ஆண்டுகளாக நாங்கள் ஆடியது இதையெல்லாம் விட பெரியது என்று ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை ஒரு பொருட்டாகவே கருதாமல் பேட்டியளித்தனர். கடைசியில் நியூசிலாந்து கோப்பையைத் தட்டிச் சென்றனர்.
டெஸ்ட் போட்டியை தோற்ற பிறகு விராட் கோலி அளித்த பேட்டியில், “ரன் எடுக்க வேண்டும் என்ற மனநிலையில் ஆட வேண்டும். அவுட் ஆவதைப் பற்றியே கவலைப்பட்டு பவுலரை பார்முக்குக் கொண்டு வரக்கூடாது” என்று புஜாரா, ரகானே பேட்டிங்கை விமர்சித்தார் கோலி. புஜாரா அந்தப் போட்டியில் 54 பந்துகளில் 8 ரன்களையும் இரண்டாவது இன்னிங்சில் 80 பந்துகளில் 15 ரன்களையும் எடுத்தார். ரகானெ 117 பந்துகளில் 49 ரன்களையும் 2வதில் 40 பந்தில் 15 ரன்களையும் எடுத்தனர்.
இந்த டெஸ்ட் போட்டிக்குப் பிறகே ஜெய் ஷாவுக்கு ரகானே, புஜாரா தொலைபேசியில் கோலியின் கேப்டன்சி குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளதாக ஆங்கில நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இரண்டு மூத்த வீரர்கள் புகார் தெரிவித்தவுடன் மற்ற வீரர்களிடமிருந்தும் பிசிசிஐ கருத்துக் கேட்டுள்ளது. அதே போல் ஐஏஎன்எஸ் ஒன்றில் கோலியின் கேப்டன்சி மீது அஸ்வினும் அதிருப்தி தெரிவித்ததாக கூறப்பட்டிருந்தது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாதியிலேயே ஓடி வந்த அந்தத் தொடரின் 4வது டெஸ்ட் போட்டியில் அஸ்வினை அணியில் எடுக்குமாறு ரவிசாஸ்திரி வலியுறுத்தியதையும் மீறி அஸ்வினை உட்கார வைத்தார் கோலி என்றும் அந்தச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் டி20 உலகக்கோப்பையில் அஸ்வினை எடுத்ததில் கோலிக்கு கடும் அதிருப்தி இருந்தது என்றும் யஜுவேந்திர சஹலை அவர் கேட்டார் என்றும் கூறப்படுகிறது.
கோலி போன்ற நடத்தை உள்ள ஒரு கேப்டன் மீது புகார்கள் எழுவது குறித்து ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்றே கிரிக்கெட் உலகம் கருதுகிறது.
ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ajinkya Rahane, Captain Virat Kohli, Cheteshwar Pujara, R Ashwin