HOME»NEWS»SPORTS»cricket rahane gets grand welcome after came from australia ghta tmn

ரஹானேவிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு. .வித்தியாசமான கேக்கை உருவாக்க சொன்னது யார் தெரியுமா ?

ஆஸ்திரேலியாவிலிருந்து கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றிப் பெற்று இந்தியா திரும்பிய ரஹானேவிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

ரஹானேவிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு. .வித்தியாசமான கேக்கை உருவாக்க சொன்னது யார் தெரியுமா ?
கிரிக்கெட் வீரர் ரஹானே
  • Share this:

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணி அடிலெய்டில் நடைபெற்ற ஆட்டத்தில் தோல்வியடைந்தது. அதன் பின்பு தனது மனைவியின் பிரசவத்திற்காக கேப்டன் விராட் கோலி இந்தியா திரும்பினார்.

இதனை தொடர்ந்து நடைபெற்ற 3 டெஸ்ட் போட்டிகளுக்கும் ரஹானே கேப்டனாக பொறுப்பேற்றார். இதனையடுத்து மெல்போர்ன் டெஸ்ட் போட்டியை இந்தியா அபாரமாக விளையாடி வெற்றிப்பெற்றது. அதன் பின்பு சிட்னி டெஸ்ட் போட்டியை டிரா செய்த இந்திய அணி, பிரிஸ்பேனில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றிப்பெற்று தொடரை கைப்பற்றியது. 

328 என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கிய நிலையில், 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 18 பந்துகள் மீதம் இருந்த நிலையிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது. ரிஷாப் பந்த் ஆட்டமிழக்காமல் 89 ரன்கள் எடுத்தார். இந்தியா தொடரை கைப்பற்றியதற்கு ரஹானேவின் கேப்டன்ஷிப் தான் காரணம் என புகழப்பட்டது.இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இல்லாத நிலையில் டீம் இந்தியாவை வழிநடத்தி வெற்றி பெற்ற பெருமை ரெஹானாவை சேரும். இதன்மூலம் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்ற இரண்டாவது இந்திய கிரிக்கெட் கேப்டனாக ரஹானே திகழ்ந்தார்.



இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பினர் இந்திய வீரர்களுக்கு சிறப்பான வரவேற்புகள் கொடுக்கப்பட்டது. கேப்டன் ரஹானே ஆஸ்திரேலியாவில் இருந்து மும்பைக்கு திரும்பியபோது அவருக்கு ரசிகர்களும்,  உறவினர்களும் மலர்களை தூவி சிவப்பு கம்பள வரவேற்பை அளித்தனர். மேலும் அந்த வரவேற்பு விழாவில் வைக்கப்பட்டிருந்த கேக் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் இருந்தது. அதாவது அந்த ஸ்பெஷல் கேக் ஒரு கிரிக்கெட் மைதானம் மாதிரியாக வடிவமைக்கப்பட்டிருந்தது, அதன் மேல் ஒரு கங்காரு அமர்ந்து இந்தியாவின் தேசிய கொடியைப் பிடித்திருந்தது. 

இந்த கேக் ஹோம் செஃப் பேக்கரியில் வாங்கப்பட்டுள்ளது. இந்த வித்தியாசமான கேக் குறித்து பேசிய பேக்கரியில் உரிமையாளர் லிமாயே-காமத், எனது நண்பரும், முன்னாள் ராஞ்சி வீரருமான ஜீதேந்திர தக்ரே தான் ரஹானேவிற்காக தனித்துவமான கேக் ஒன்றை வடிவமைக்கலாம் என்ற யோசனையை பரிந்துரைத்தாக கூறினார். மேலும் கேக் மாடல் குறித்து முதலில் புகைப்படம் ஒன்று வரைந்து கேக் மாஸ்டரிடம் கொடுத்ததாகவும், அவர் சிறப்பாக வடிவைமைத்துள்ளதாகும் தெரிவித்தார். 

அத்துடன் கேக்கில் ரஹானே கோப்பையை வைத்திருக்கும் புகைப்படத்தை இணைத்துள்ளனர்.இந்த வரவேற்பை ஏற்றுக்கொண்ட ரஹானே அனைவருக்கும் நன்றி கூறினார். மேலும் இந்த புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
Published by:Tamilmalar Natarajan
First published: