முகப்பு /செய்தி /விளையாட்டு / வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.8 கோடி கொடுத்த டென்னிஸ் வீரர்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.8 கோடி கொடுத்த டென்னிஸ் வீரர்!

வெள்ள பாதிப்பில் உதவிய நடால். (Twitter/LaureusSport)

வெள்ள பாதிப்பில் உதவிய நடால். (Twitter/LaureusSport)

#RafaelNadal Donates $1.15 Million | மல்லோர்கா தீவில் கடந்த அக்டோபர் மாதம் 9-ம் தேதி கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.

  • Last Updated :

மல்லோர்கா தீவுப் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்காக சுமார் 8 கோடி ரூபாயை நிவாரண நிதியாக டென்னிஸ் வீரர் நடால் அளித்துள்ளார்.

ஸ்பெயின் நாட்டின் மல்லோர்கா தீவில் கடந்த அக்டோபர் மாதம் 9-ம் தேதி கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. ஏராளமான பொதுமக்கள் தங்களது வீடு மற்றும் உடமைகளை இழந்தனர். தொடர் வெள்ளத்தில் சிக்கி 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மல்லோர்கா தீவில் தான் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள டென்னிஸ் வீரர் ரபேல் நடால் வசித்து வருகிறார். இவர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் களத்தில் இறங்கி உதவி செய்தார். வெள்ள பாதிப்பின்போது குவிந்து கிடந்த கழிவுகளை அகற்றும் பணியிலும் அவர் ஈடுபட்டார்.

பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கு வசதியாக, நடால் தனது விளையாட்டு மையம் ஆகியவற்றை திறந்து உதவி செய்தார். மேலும் வெள்ளத்தில் சிக்கியிருந்தவர்களையும் மீட்க உதவினார். நடாலின் செயலை முன்னணி டென்னிஸ் வீரர்களான பெடரர், ஜோகோவிச் உள்ளிட்டோர் பாராட்டினர்.

Nadal
பயிற்சி மையத்தில் குழந்தைகளுடன் நடால். (Instagram/rafaelnadal)

தற்போது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகளை செய்வதற்காக ஒரு மில்லியன் யூரோவை நிவாரண நிதியாக அளித்துள்ளார். இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 8 கோடி ரூபாயை அளித்து உதவி செய்துள்ளார். இவரின் மனித நேயத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Also Watch...

top videos

    First published:

    Tags: Rafael Nadal