ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

நம்முடைய தேசத்திலேயே நிறவெறி பாகுபாடு- எல்.சிவராம கிருஷ்ணன், முகுந்த் ஓபன் டாக்

நம்முடைய தேசத்திலேயே நிறவெறி பாகுபாடு- எல்.சிவராம கிருஷ்ணன், முகுந்த் ஓபன் டாக்

எல்.சிவராமகிருஷணன்

எல்.சிவராமகிருஷணன்

சொந்த தேசத்திலேயே நிறவெறி பாகுபாட்டினால் தான் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானதை முன்னாள் இந்திய லெக் ஸ்பின்னர் எல்.சிவராம கிருஷ்ணன் மனம் திறந்து கொட்டியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த சில மாதங்களாக நிறவெறி என்பது, மிகப்பெரிய விஷயமாக மாறி கண்டிக்கப்பட்டு வருகிறது. இங்கிலாந்தில் யார்க் ஷயர் கிரிக்கெட் அசிம் ரபிக் என்பவர் புயலைக் கிளப்பினார். இதில் மைக்கேல் வான் உட்பட பல இங்கிலாந்து வீரர்களின் வண்டவாளம் வெளியானது. இப்போது சொந்த தேசத்திலேயே நிறவெறி பாகுபாட்டினால் தான் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானதை முன்னாள் இந்திய லெக் ஸ்பின்னர் எல்.சிவராம கிருஷ்ணன் மனம் திறந்து கொட்டியுள்ளார்.

இந்திய அணிக்காக தொடக்க வீரராக ஆடிய அபினவ் முகுந்த், “இந்தியாவுக்கு வெளியேயேும், உள்ளேயும் என்னுடைய 15 வயதிலிருந்து அதிகமாகப் பயணித்திருக்கிறேன். நான் சிறுவயதிலிருந்து என் நிறத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் ஒருவிதமான எண்ணம் எனக்கு புதிராகவே இருந்தது.

வெயில்காலத்திலும் வெயில் இல்லாத நேரத்திலும் நான் பயிற்சியில் இருந்திருக்கிறேன், விளையாடியிருக்கிறேன், நான் ஒருமுறைகூட வெயிலில் விளையாடியதற்காக நான் தோல் நிறம் குறைந்துவிட்டதாக வருத்தப்பட்டதில்லை. நான் என்ன செய்கிறேனோ அதை விரும்பிச் செய்பவன் நான். நாட்டிேலயே அதிகமான வெப்பமான பகுதியான சென்னையிலிருந்து வந்தேன். என்னுடைய இளமைக்கால வாழ்க்கை பெரும்பகுதி கிரிக்கெட் மைத்தானத்திலேயே செலவிட்டேன்” என்று கூறியிருந்தார்.

இதற்குப் பதில் அளிக்கும் விதமாக கூறிய முன்னாள் லெக் ஸ்பின்னர் சிவராம கிருஷ்ணன், “என் வாழ்க்கை முழுவதும் என் நிறத்தால் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாக்கப்பட்டு பாகுபாடு செய்யப்பட்டேன். இதைப்பற்றி ஒருபோதும் நான் கவலைப்பட்டதில்லை. ஆனால் துரதிர்ஷ்டமாக இதுபோன்ற நிகழ்வுகள் நம்முடைய சொந்த தேசத்திலேயே எனக்கு நடந்தது” என்று எல்.சிவராம கிருஷ்ணன் தெரிவித்தார்.

நிற மேட்டிமை, நிற உயர்வு தாழ்வுக்கு எந்த ஒரு அறிவியல் அடிப்படையும் கிடையாது என்று பல நிபுணர்களும் கூறியுள்ளனர், இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை அடக்கி ஆள, அவர்களை கீழ்த்தரமான வேலைகளைச் செய்ய, சுரண்ட, அடிமைப்படுத்த, காலனியாதிக்கம் செய்ய, அவர்களது செல்வங்களைச் சுரண்ட கையாளப்படும் தந்திரமே இந்த நிறவெறி என்று சமுதாயவியலாளார்கள் பலரும் கண்டித்துள்ளனர்.

ஆனாலும் வெள்ளை நிறவெறி என்பது இன்னமும் சமூகத்தில் பல ரூபங்களில் இருக்கவே செய்கிறது. வெள்ளை நிறமே அழகு என்பது போன்ற மாயை காலங்காலமாக கட்டமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிராக மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா போன்ற தலைவர்கள் போராடினர். இன்றும் கருப்பரினத்தவர்கள் தங்களை எதிர்த்து நடத்தப்படும் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்கின்றனர், செயல்பூர்வமாக இருந்து வருகின்றனர்.

தென் ஆப்பிரிக்க அணியில் பல கருப்பரின வீரர்கள் ஆடியுள்ளனர், அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய மகாயா நிடினி, ஸ்பின்னர் பால் ஆடம்ஸ், விக்கெட் கீப்பர் சோலகிளி, ஆஷ்வெல் பிரின்ஸ், பிலாண்டர் உள்ளிட்ட வீரர்கள் அணிக்குள்ளேயே வேறு விதமாக நடத்தப்பட்ட கதையும் இப்போது அம்பலமாகியுள்ளது.

ஒன்றாக விளையாடுவார்கள் எல்லாம் செய்வார்கள், அணி பயணிக்கும் பேருந்தில் ஒன்றாக அமர மாட்டார்கள். ஒன்றாக அமர்ந்து உணவருந்த மாட்டார்கள். என்று நிடினி கூறியது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

First published:

Tags: Cricket, Racism