முகப்பு /செய்தி /விளையாட்டு / சிட்னி மைதானத்தில் முகமது சிராஜுக்கு இன்றும் நிறவெறி இழிவுபடுத்தல் - பார்வையாளர்கள் வெளியேற்றம்!

சிட்னி மைதானத்தில் முகமது சிராஜுக்கு இன்றும் நிறவெறி இழிவுபடுத்தல் - பார்வையாளர்கள் வெளியேற்றம்!

இந்திய வீரர்களை நிறவெறி ரீதியில் இழிவுபடுத்தியதாக சிட்னி மைதானத்தில் இருந்து பார்வையாளர்களில் 6 பேர் வெளியேற்றப்பட்டனர்.

இந்திய வீரர்களை நிறவெறி ரீதியில் இழிவுபடுத்தியதாக சிட்னி மைதானத்தில் இருந்து பார்வையாளர்களில் 6 பேர் வெளியேற்றப்பட்டனர்.

இந்திய வீரர்களை நிறவெறி ரீதியில் இழிவுபடுத்தியதாக சிட்னி மைதானத்தில் இருந்து பார்வையாளர்களில் 6 பேர் வெளியேற்றப்பட்டனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி டி-20, ஒரு நாள் தொடர்களையடுத்து தற்போது டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது.

சிட்னி மைதானத்தில் நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியின் 4வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. முன்னதாக 2வது மற்றும் 3வது நாள் ஆட்டங்களின் போது சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலிய ரசிகர்களால் இந்திய வீரர்கள் முகமது சிராஜ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இனவெறி ரீதியில் இழிவுபடுத்தப்பட்டதாக புகார் எழுந்தது.

கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இவ்விவகாரம் தொடர்பாக இந்திய அணி தரப்பில் ஐசிசி மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து 4வது நாள் ஆட்டத்தின் போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜை ரசிகர்கள் நிறவெறியுடன் இழிவுபடுத்தியதாக புகார் எழுந்தது.

இதன் காரணமாக போட்டியின் போது ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. நடுவர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கேலரிக்கு சென்று குறிப்பிட்ட பார்வையாளர்கள் 6 பேரை வெளியேற்றினர், இதன் பின்னரே போட்டி தொடர்ந்து நடைபெற்றது.

சிட்னி மைதானத்தில் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் இந்திய வீரர்கள் மீதான நிறவெறி விமர்சனங்களை ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் கண்டித்துள்ளது. இது தொடர்பாக ஆஸி கிரிக்கெட் நிர்வாகத்தின் பாதுகாப்பு தலைமை அதிகாரி சீன் காரோல் கூறுகையில், இது போன்ற நிறவெறியை தூண்டும் செயல்களை ஆஸி நிர்வாகம் வன்மையாக கண்டிக்கிறது. இது போன்ற செயல்களில் ஈடுபடுவோரை ஆஸி கிரிக்கெட் நிர்வாகம்

வரவேற்காது.

இது தொடர்பாக ஐசிசியின் நடவடிக்கையை ஆஸி கிரிக்கெட் நிர்வாகம் எதிர்நோக்கியுள்ளது. அனைத்து வகையிலும் விசாரணைக்கு நாங்கள் உதவுவோம், மேல் நடவடிக்கையாக போலீசில் புகார் அளிப்பது குறித்தும் முடிவெடுப்போம் என தெரிவித்தார்.

மைதானத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை விசாரணைக்காக வழங்குவோம். போட்டியை நடத்தும் நாடு என்ற வகையில் இச்சம்பவத்திற்காக இந்திய கிரிக்கெட் நண்பர்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பையும் கோருகிறோம். அதே நேரத்தில் தகுந்த நடவடிக்கையும் நாங்கள் எடுப்போம் என சீன் காரோல் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தை நாங்கள் மிகவும் தீவிரத்துடன் அணுகுவோம் எனவும், இச்சம்பவத்தில் ஈடுபட்டோரை கண்டறிந்து எங்களின் விதிப்படி ஆஸி மைதானங்களில் இனி அந்த நபர்களை அனுமதிக்க மாட்டோம் எனவும் அவர் கூறினார்.

First published:

Tags: Ind Vs Aus, Mohammed siraj