Home /News /sports /

இன்னும் 2 நாட்களில் இந்திய அணியுடன் இணைகிறார் அஸ்வின்

இன்னும் 2 நாட்களில் இந்திய அணியுடன் இணைகிறார் அஸ்வின்

இந்திய அணி.

இந்திய அணி.

மூத்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் அடுத்த ஓரிரு நாட்களில் இங்கிலாந்து செல்கிறார் என்று கிரிக்பஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அனுபவம் வாய்ந்த அஸ்வின் வெள்ளிக்கிழமை லெய்செஸ்டருக்கு எதிரான பயிற்சி ஆட்டத்திற்கு முன்னதாக இந்திய அணியில் இணைவார் என்றாலு பயிற்சி ஆட்டத்தில் ஆடுவது சந்தேகம் என்று பிசிசிஐ தரப்பில் ஒருவர் கூறியதும் குறிப்பிடத்தக்கது.

ரவிச்சந்திரன் அஸ்வினுக்குக் கொரோனா பாசிட்டிவ் என்பதால் கோவிட் நடைமுறைகளின் படி அவர் தனிமையில் உள்ளார், மேலும் அவர் கோவிட் நடைமுறைகளைக் கடைப்பிடித்த பிறகே இங்கிலாந்து செல்ல முடியும் என்று பிசிசிஐ தரப்பு தெரிவித்திருந்தது.

கடந்த முறை இந்திய அணி அங்கு 2-1 என்று தொடரில் முன்னிலை பெற்றிருந்த போது கோலி, அஸ்வினுக்கு வாய்ப்பைத் தராமல் அவரை நோகடித்தார். ஆனால் கோலி அதற்கான நியாயங்களையும் தன் வெற்றி மூலம் வழங்கினார்.

இந்நிலையில் கொரோனா பாதித்த அஸ்வின், கோவிட் நடைமுறைகள் விதிகளுக்கு இணங்க அனைத்தையும் கடைப்பிடித்து பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அடுத்த 24 மணி நேரத்தில் இங்கிலாந்துக்கு பறப்பார் என்றும் கிரிக்பஸ் ஊடகம் தெரிவிக்கின்றது.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவரான சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் 86 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக 442 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 5 சதங்கள் மற்றும் 12 அரை சதங்களுடன், அஸ்வின் இந்தியாவுக்காக 2,931 ரன்களை டெஸ்ட்டில் எடுத்துள்ளார்.
Published by:Muthukumar
First published:

Tags: COVID-19 Test, India Vs England, R Ashwin, Test cricket

அடுத்த செய்தி