Home /News /sports /

Quinton de Kock| குவிண்டன் டீ காக் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு- தென் ஆப்பிரிக்கா அதிர்ச்சி

Quinton de Kock| குவிண்டன் டீ காக் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு- தென் ஆப்பிரிக்கா அதிர்ச்சி

ஓய்வு பெற்றார் குவிண்டன் டி காக்.

ஓய்வு பெற்றார் குவிண்டன் டி காக்.

செஞ்சூரியன் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா தோற்ற 5ம் நாள் ஆட்டம் முடிந்த பிறகு சில மணி நேரத்தில் தென் ஆப்பிரிக்காவின் அதிரடி விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மென் குவிண்டன் டி காக் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார்.

    செஞ்சூரியன் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா தோற்ற 5ம் நாள் ஆட்டம் முடிந்த பிறகு சில மணி நேரத்தில் தென் ஆப்பிரிக்காவின் அதிரடி விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மென் குவிண்டன் டி காக் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார்.

    இந்திய அணி நேற்று தென் ஆப்பிரிக்கா அணியை 113 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து செஞ்சூரியன் கோட்டையைத் தகர்த்தது. இந்நிலையில் குவிண்டன் டி காக் திடீர் ஓய்வு அந்த அணியினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. தன்னுடைய வளரும் குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்தார்.

    இந்தியாவுக்கு எதிரான 2வது மற்றும்ம் 3வது டெஸ்ட் போட்டியில் விலக்கு கேட்டிருந்தார் டி காக், ஆனால் திடீரென இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டே வேண்டாம் என்று ஓய்வு பெற்று விட்டார் டி காக். செஞ்சூரியன் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சவுகரியமாகவே ஆடினார், ஆனால் இரண்டு இன்னிங்ஸ்களிலும் பேசாமல் தேமேன்னு சென்ற பந்தை மட்டையில் வாங்கி ஸ்டம்புக்குள் விட்டுக் கொண்டு ஆட்டமிழந்தார்.

    இந்நிலையில், “நான் இந்த டெஸ்ட் ஓய்வு முடிவுக்கு அவ்வளவு எளிதாக வந்துவிடவில்லை. என்னுடைய எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்து இந்த முடிவுக்கு வந்தேன். நான் என் மனைவி சாஷாவும் எங்கள் முதல் குழந்தையை வரவேற்கக் காத்திருக்கிறோம். எங்கள் குடும்பத்தை வளர்க்க வேண்டிய தேவை உள்ளது.

    என் குடும்பம்தான் எனக்கு முக்கியம், அவர்களுடன் வாழ்வதற்கான காலமும் இடமும் அவசியம். இப்போது புதுவரவுடன் எங்களுக்கு உற்சாகமான வாழ்க்கை காத்திருக்கிறது. எனக்கு டெஸ்ட் கிரிக்கெட் பிரியமானது, என் நாட்டுக்காக ஆடுவதும் எனக்கு பிரியமானது. என் கிரிக்கெட் வாழ்வில் கொண்டாட்டங்களையும், ஏற்றத்தாழ்வுகளையும் பார்த்து விட்டேன். இப்போது நான் கண்டுப்பிடித்துக் கொண்ட எனக்கான பிரியமான வாழ்க்கையை தேர்ந்தெடுத்துள்ளேன்.

    என் கிரிக்கெட் வாழ்க்கையில் என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி. இது என் கிரிக்கெட் வாழ்வின் முடிவு அல்ல, ஒருநாள் டி20 கிரிக்கெட்டுகளில் தொடர்ந்து ஆடுவேன்” என்றார்.

    தென் ஆப்பிரிக்கா கேப்டனாக 4 டெஸ்ட் போட்டிகளில் ஆடினார் டி காக். இலங்கையுடன் 2-0 என்று வென்றார், ஆனால் பாகிஸ்தானுக்கு எதிராக பாகிஸ்தானில் 0-2 என்று தோற்றார். டி காக் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2014-ல் டெஸ்ட்டில் அறிமுகமானார். 54 டெஸ்ட் போட்டிகளில் 3,300 ரன்களை எடுத்தார். சராசரி 38.82. நம்பரை மீறியும் அசாத்திய திறமை கொண்டவர் டிகாக். 6 சதங்களை அடித்துள்ளார்.

    செஞ்சூரியனில்தான் முதல் டெஸ்ட் சதமெடுத்தார், இங்கேயே ரிட்டையரும் ஆகிவிட்டார். 2016-ல் 7ம் நிலையில் இறங்கி இங்கிலாந்துக்கு எதிராக 129 நாட் அவுட், அந்த டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்கா இங்கிலாந்தை 280 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    அதே போல் அதே 2016-ம் ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவின் ஹோபார்ட்டில் மேட்ச் வின்னிங் சதம் ஒன்றை எடுத்தார், இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியாவில் 3வது முறையாக தொடர்ச்சியாக டெஸ்ட் தொடரை வென்றது, அந்த ஆண்டில் டி காக்கின் சராசரி 63.18. அவரது சிறந்த ஆண்டு.
    Published by:Muthukumar
    First published:

    Tags: India vs South Africa

    அடுத்த செய்தி