முகப்பு /செய்தி /விளையாட்டு / துணைக்குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவை சந்தித்த பி.வி.சிந்து!

துணைக்குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவை சந்தித்த பி.வி.சிந்து!

துணைக்குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவை சந்தித்த பி.வி.சிந்து. (Twitter)

துணைக்குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவை சந்தித்த பி.வி.சிந்து. (Twitter)

#PVSindhu meets Vice President #VenkaiahNaidu | வேர்ல்டு டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் தொடரில் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை பி.வி. சிந்து படைத்தார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

வேர்ல்டு டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் தொடரில் பட்டம் வென்ற பி.வி.சிந்து, துணைக் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அண்மையில், சர்வதேச பேட்மிண்டன் தரவரிசையில் முதல் 8 இடங்களில் இருக்கும் நட்சத்திர வீராங்கனைகளுக்கான ‘வேர்ல்டு டூர் பைனல்ஸ்’ பேட்மிண்டன் தொடர் சீனாவில் நடைபெற்றது. இந்தியா சார்பில் பங்கேற்ற ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து, தோல்வியே சந்திக்காமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இறுதிப் போட்டியில் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள ஜப்பானின் நசோமி ஒகுகரா உடன் பலப்பரீட்சை நடத்தினார். ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய சிந்து, 21-19, 21-17 என நேர்செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

PV Sindhu Champion, பி.வி.சிந்து
வேர்ல்டு டூர் பைனல்ஸ் தொடரில் சாம்பியனான மகிழ்ச்சியில் பி.வி.சிந்து. (Twitter)

வேர்ல்டு டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் தொடரில் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை பி.வி. சிந்து படைத்தார். 7 முறை இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்திருந்த சிந்து, தனது விடாமுயற்சியால் முதல் முறையாக தங்கப் பதக்கத்தை உச்சிமுகர்ந்தார்.

PV Sindhu, பி.வி.சிந்து
துணைக்குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவை சந்தித்த பி.வி.சிந்து. (ANI)

இந்நிலையில், ஹைதராபாத்தில் இன்று துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவை, சிந்து தனது குடும்பத்துடன் நேரில் சந்தித்தார். அப்போது, தான் வென்ற தங்கப் பதக்கத்தை வெங்கையா நாயுடுவிடம் காட்டி வாழ்த்துக்களைப் பெற்றார்.

Also Watch...

First published:

Tags: PV Sindhu, Venkaiah Naidu