பட்லரின் அதிரடி வீண்! ராஜஸ்தானை வீழ்த்தியது பஞ்சாப்

ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரராக ரஹானேவும் ஜோஸ் பட்லரும் களமிறங்கினர். 27 ரன்களில் ரஹானே ஆட்டமிழந்த நிலையில், பட்லர் அதிரடியாக ஆடினார்.

news18
Updated: March 25, 2019, 11:47 PM IST
பட்லரின் அதிரடி வீண்! ராஜஸ்தானை வீழ்த்தியது பஞ்சாப்
டாஸ் போடும் இரு அணிகளின் கேப்டன்கள்.
news18
Updated: March 25, 2019, 11:47 PM IST
ராஜஸ்தான் அணிக்கு எதிரானப் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் திருவிழா கடந்த 23-ம் தேதி முதல் இந்தியாவில் களைகட்டி வருகிறது. இந்தத் தொடரில் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஜெய்ப்பூரில் இன்று 8 மணிக்கு தொடங்கிய 4-வது லீக் போட்டியில் ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கிரிஸ் கெய்ல் 47 பந்துகளில் 79 ரன்கள் குவித்தார். அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரராக ரஹானேவும் ஜோஸ் பட்லரும் களமிறங்கினர். 27 ரன்களில் ரஹானே ஆட்டமிழந்த நிலையில், பட்லர் அதிரடியாக ஆடினார்.

இருப்பினும், அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பட்லர் மட்டும் அதிரடியாக ஆடி 69 ரன்களைக் குவித்தார். 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி, 9 விக்கெட் இழப்புக்கு 170 ரன்களை மட்டுமே குவித்தது. அதனையடுத்து, பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி சார்பில் சாம் குரன், முஜீப் உர் ரஹ்மான், அன்கிட் ராஜ்பூட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Also see:

First published: March 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...