கிறிஸ் கெய்ல் அதிரடி! 163 ரன்கள் குவித்தது பஞ்சாப் அணி

டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய லோகேஷ் ராகுல் 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.

news18
Updated: April 20, 2019, 9:56 PM IST
கிறிஸ் கெய்ல் அதிரடி! 163 ரன்கள் குவித்தது பஞ்சாப் அணி
கிறிஸ் கெய்ல்
news18
Updated: April 20, 2019, 9:56 PM IST
டெல்லி அணிக்கு எதிரானப் போட்டியில் பஞ்சாப் அணி 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது.

ஐ.பி.எல் தொடரின் 37-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய லோகேஷ் ராகுல் 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து இறங்கிய மாயன்ங் அகர்வால் 2 ரன்களிலும், டேவிட் மில்லர் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மறுபுறம் அதிரடியாக ஆடிய கிறிஸ் கெய்ல் 37 பந்துகளில் 69 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மந்தீப் சிங் 30 ரன்கள் எடுத்தார். 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் குவித்தது. டெல்லி அணியின் சார்பில் சந்தீப் லமிசானெ 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.





Also see:

First published: April 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்