ராஜஸ்தானை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முன்னேறிய பஞ்சாப் அணி!

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்துள்ளது.

Web Desk | news18
Updated: April 17, 2019, 12:19 AM IST
ராஜஸ்தானை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முன்னேறிய பஞ்சாப் அணி!
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்துள்ளது.
Web Desk | news18
Updated: April 17, 2019, 12:19 AM IST
ராஜஸ்தான் அணிக்கு எதிரானப் போட்டியில் பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐ.பி.எல் லீக் போட்டியில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்துள்ளது.

அடுத்ததாக ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரராக ராகுல் திரிபதி, ஜோஸ் பட்லர் களமிறங்கினர். படலர் 23 ரன்களிலும், அடுத்து இறங்கிய சஞ்சு சாம்சன் 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். நிதானமாக ஆடிய ராகுல் திரிபதி 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஸ்டௌர்ட் பின்னி 33 ரன்கள் எடுத்தார்.

இருப்பினும், ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனையடுத்து, பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி சார்பில் அஸ்வின், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை குவித்தனர்.

Also see:

First published: April 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...