புல்வாமா தாக்குதல்: விளையாட்டு வீரர்கள் கடும் கண்டனம்!
#PulwamaAttack LIVE Updates: Sports Players strongly condemned | வீரேந்திர சேவாக், விவிஎஸ் லக்ஷ்மன், முகமது கைப், ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னா, விஜேந்தர் சிங் உள்ளிட்ட பலர் ட்விட்டரில் கண்டனத்தை கூறியுள்ளனர்.

புல்வாமா தாக்குதல் நிகழ்த்தப்பட்ட இடம்.
- News18
- Last Updated: February 14, 2019, 8:39 PM IST
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு நகரில் இருந்து ஸ்ரீநகருக்கு 54பி பட்டாலியனைச் சேர்ந்த துணை ராணுவ (சி.ஆர்.பி.எப்) வீரர்களுடன் 2 வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அவந்திப்போரா பகுதியில் உள்ள லாதூமோட் என்ற இடத்தின் அருகே வாகனகள் சென்றபோது, 350 கிலோ வெடிமருந்துடன் பயங்கரவாதி ஓட்டி வந்த காரை, ராணுவ வீரர்களின் வாகனத்தில் மோதச் செய்து தற்கொலைப்படைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.

துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின்மீது தற்கொலைப்படை தாக்குதல்.
இந்தத் தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த மோசமான பயங்கரவாத தாக்குதலுக்கு, பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், விளையாட்டு வீரர்களும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். வீரேந்திர சேவாக், விவிஎஸ் லக்ஷ்மன், முகமது கைப், ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னா, விஜேந்தர் சிங் உள்ளிட்ட பலர் ட்விட்டரில் கண்டனத்தைக் கூறியுள்ளனர்.
Deeply saddened and disturbed by the news. I condemn the terror attack in #Pulwama. My condolences to the families of the jawans who sacrificed their lives.
— Shikhar Dhawan (@SDhawan25) February 14, 2019
Appalled and deeply disturbed by the news of CRPF jawans killed in Kashmir's Pulwama. My thoughts and prayers with the martyrs' families.
— Suresh Raina🇮🇳 (@ImRaina) February 14, 2019
Really pained by the cowardly attack on our CRPF in J&K in which our brave men have been martyred . No words are enough to describe the pain. I wish a speedy recovery to those injured.#SudharJaaoWarnaSudhaarDenge
— Virender Sehwag (@virendersehwag) February 14, 2019
Really pained to hear about the attack on our #CRPF men who have been martyred in the attack in J&K. I pray the coward attackers are taught a lesson at the earliest.
— Mohammad Kaif (@MohammadKaif) February 14, 2019
Sad and pained to hear about the dastardly attack on our brave CRPF men in #Pulwama in which many of our jawans have been martyred . I pray for a quick and speedy recovery of those injured in the attack.
— VVS Laxman (@VVSLaxman281) February 14, 2019
कब तक कड़ी निंदा होगी ? 🇮🇳🙏🏽 #Pulwama
— Vijender Singh (@boxervijender) February 14, 2019
முதல் முறையாக தோனி பெயரில் பெவிலியன்: ரசிகர்கள் கொண்டாட்டம்!
Also Watch...