இந்தியாவின் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் பேட்டர் செடேஸ்வர் புஜாரா நேற்று சசெக்ஸ் அணிக்காக 131 பந்துகளில் 20 பவுண்டரி 5 சிக்சர்களுடன் 174 ரன்கள் விளாசினார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் புஜாராவின் அதிகபட்ச ஸ்கோர் இது. 48 மணி நேரத்தில் தன் 2வது சதத்தை பதிவு செய்தார் புஜாரா.
புஜாராவின் அதிரடி 174 மற்றும் டாம் கிளார்க் என்பவரின் 104 ரன்களால் சசெக்ஸ் அணி 378 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய சர்ரே அணி 162 ரன்களுக்கு மடிந்தது. புஜாரா 50 ஓவர் கிரிக்கெட்டில் எடுக்கும் 13வது சதமாகும் இது. இதற்கு முன்னர் வார்விக்ஷயர் அணிக்கு எதிராக புஜாரா 79 பந்துகளில் 107 ரன்களை விளாசியதும் குறிப்பிடத்தக்கது.
இதில் ஆச்சரியம் என்னவெனில் புஜாரா வேகப்பந்து வீச்சாளர்களான மேட் டன், கானர் மெக்கர், ரியான் படேல் ஆகியோர் பந்துகளை சிக்சர் பறக்க விட்டார், அமர் விர்தி, யூசப் மஜீத் ஆகிய ஸ்பின்னர்களையும் சிக்சர் அடித்தார்.
புஜாரா சதம் வீடியோ:
Back to back centuries for @cheteshwar1. 💯 🤩 pic.twitter.com/9F7bMlvvkF
— Sussex Cricket (@SussexCCC) August 14, 2022
இந்த இன்னிங்சில் 3வது விக்கெட்டுக்காக டாம் கிளார்க்குடன் 205 ரன்கள் சேர்த்தார் புஜாரா. சதம் அடித்த பிறகு புஜாராவுக்குள் வெறி புகுந்தது 28 பந்துகளி 74 ரன்களை விளாசித்தள்ளினார். 48வது ஓவரில்தான் ஆட்டமிழந்தார்.
இது செகண்ட் டிவிஷன் லீக் என்பதை ரசிகர்கள் நினைவில் கொள்ள வேண்டும். இதில் 13 இன்னிங்ஸ்களில் புஜாரா 1094 ரன்களை 109.40 என்ற சராசரியில் எடுத்துள்ளார் புஜாரா.
இந்த சீசனில் சசெக்ஸ் அணிக்காக புஜாரா 3 இரட்டைச் சதம் உட்பட 5 சதங்கள் அடித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cheteshwar Pujara