IND vs ENG புஜாரா மாதிரி ஆடிக்கொண்டிருந்த பேர்ஸ்டோவை ரிஷப் பண்ட் ஆக்கி விட்டார் கோலி - சேவாக் காட்டம்
IND vs ENG புஜாரா மாதிரி ஆடிக்கொண்டிருந்த பேர்ஸ்டோவை ரிஷப் பண்ட் ஆக்கி விட்டார் கோலி - சேவாக் காட்டம்
விராட் கோலி-சேவாக்
நேற்று ஜானி பேர்ஸ்டோ 64 பந்துகளில் 16 என்று புஜாரா போல் பேட் செய்து கொண்டிருந்தார். விராட் கோலி அவரிடம் போய், ‘என்ன! சவுதியை அடிச்சது போல அடிக்க முடியலையா? இது வேற லெவல்’ என்று ஸ்லெட்ஜ் செய்ததோடு, அவர் பீட்டன் ஆனபோதெல்லாம் கைதட்டி மகிழ்ந்தார், இதனால் பேர்ஸ்டோ ஸ்ட்ரைக் ரேட் 150 ஆக உயர்ந்தது, இதற்குக் காரணம் கோலியின் ஸ்லெட்ஜிங் தான் என்று சேவாக் சாடியுள்ளார்.
நேற்று ஜானி பேர்ஸ்டோ 64 பந்துகளில் 16 என்று புஜாரா போல் பேட் செய்து கொண்டிருந்தார். விராட் கோலி அவரிடம் போய், ‘என்ன! சவுதியை அடிச்சது போல அடிக்க முடியலையா? இது வேற லெவல்’ என்று ஸ்லெட்ஜ் செய்ததோடு, அவர் பீட்டன் ஆனபோதெல்லாம் கைதட்டி மகிழ்ந்தார், இதனால் பேர்ஸ்டோ ஸ்ட்ரைக் ரேட் 150 ஆக உயர்ந்தது, இதற்குக் காரணம் கோலியின் ஸ்லெட்ஜிங் தான் என்று சேவாக் சாடியுள்ளார்.
64க்கு 16 என்று இருந்த பேர்ஸ்டோ, விராட் கோலியின் ஸ்லெட்ஜிங்குக்குப் பிறகே 39 பந்துகளில் 75 ரன்கள் விளாசினார், 119 பந்துகளில் சதம் அடித்தார், அதாவது 55 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார், இதற்குக் காரணம், சிராஜ், ஷர்துல் தாக்கூரின் மோசமான பவுலிங்கே. மேலும் டியூக் பந்து 30 ஒவர்களுக்குப் பிறகு பிளாஸ்டிக் ஆகிவிடுகிறது. பிட்ச் பெட்ஷீட் ஆகிவிட்டது. என்ன செய்வது, கோலிக்கும் இதற்கும் சம்பந்தமில்லை, ஆனால் சேவாக் தேவைஇல்லாமல் கோலியை திட்டி ட்வீட் செய்துள்ளார்.
சேவாக் தன் ட்வீட்டில், “கோலி அவரை கிண்டல் செய்வதற்கு முன்னால் பேர்ஸ்டோவின் ஸ்ட்ரைக் ரேட் 21 தான். கோலியின் ஸ்லெட்ஜிங்குக்குப் பிறகு பேர்ஸ்டோவின் ஸ்ட்ரைக் ரேட் 150. புஜாரா மாதிரி ஆடிக்கொண்டிருந்தவரைப் போய் கோலி ஸ்லெட்ஜிங் செய்து ரிஷப் பண்ட்டாக மாற்றிவிட்டார்” என்று நகைச்சுவையாக கருத்திட்டுள்ளார். ஆனால் புஜாராவை கேலி செய்தல் கூடாது.
புஜாரா நேற்று அந்த கண்டிஷனிலும் ஒரு கிளாசிக் டெஸ்ட் அரைசதம் எடுத்துள்ளார். எந்த ஒரு அணியிலும் யாராவது ஒருவர் அப்படி ஆடவே செய்வார்.
ஆனால் இங்கிலாந்துக்கு இது புதிது, அதனா அவர்கள் ‘பாஸ்பால்’ என்றெல்லாம் மெக்கல்லமின் உத்தியை கொண்டாடி வருகின்றனர், உலகத்துக்கு இது புதிதல்ல, டான் பிராட்மேன் தொடங்கி, தென் ஆப்பிரிக்காவின் பேரி ரிச்சர்ட்ஸ், வெஸ்ட் இண்டீசின் கேரி சோபர்ஸ், விவ் ரிச்சர்ட்ஸ், முதல் நியூசிலாந்தின் மார்க் கிரேட்பேட்ச் நம் காலத்தில் ஆடம் கில்கிறிஸ்ட் சேவாக், சச்சின், ஜெயசூரியா, பிரெண்டன் மெக்கல்லம், சயீத் அன்வர், தமிம் இக்பால், முகமது அஷ்ரபுல், பாகிஸ்தானின் ஷாகித் அஃப்ரீடி, என்று டெஸ்ட் மேட்சிலும் ஒருநாள் போல் ஆடுவோர் பட்டியல் நீளம்.
இவர்களெல்லாம் இப்படித்தான் ஆடினார்கள், இங்கிலாந்துக்கு இது புதிது அதனால் அவர்கள் ஜானி பேர்ஸ்டோவை கொண்டாடுகின்றனர் அவ்வளவே, அதுவும் நேற்று அவர் செம தடவு தடவினார், ஏகப்பட்ட அதிர்ஷ்டத்தில் சதம் எடுத்தார், அதனால் விராட் கோலியின் ஸ்லெட்ஜிங்கினால்தான் அவர் ஊக்கம் பெற்றார் என்பது சேவாகின் தவறான புரிதலே.
Published by:Muthukumar
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.