Home /News /sports /

என்னை வீழ்த்த முடியுமா!!- பாறையாய் நின்ற புஜாரா 201 நாட் அவுட்- பாலோ ஆனில் ட்ரா செய்த அபார ஆட்டம்

என்னை வீழ்த்த முடியுமா!!- பாறையாய் நின்ற புஜாரா 201 நாட் அவுட்- பாலோ ஆனில் ட்ரா செய்த அபார ஆட்டம்

புஜாரா

புஜாரா

டெர்பியில் நடைபெற்ற இங்கிலிஷ் கவுண்ட்டி கிரிக்கெட்டின் சசெக்ஸ் மற்றும் டெர்பி ஷயர் அணிகளுக்கு இடையே நடைபெற்ற 4 நாள் போட்டி ட்ராவில் முடிவடைய புஜாராவின் நங்கூரம் பாய்ச்சிய இரட்டைச் சதமும் ஒரு காரணம். பாலோ ஆன் ஆடிய சசெக்ஸ் 2வது இன்னிங்ஸில் 513/3 என்று போட்டியை ட்ரா செய்தது.

மேலும் படிக்கவும் ...

    இதில் இந்திய டெஸ்ட் டிஸ்கார்டு புஜாரா 467 நிமிடங்கள் நின்று 387 பந்துகளில் 201 நாட் அவுட், இதில் 23 பவுண்டரிகள் அடங்கும் இவருடன் ஆடிய கேப்டன் டாம் ஹெய்ன்ஸ் 243 ரன்கள் எடுத்தார். இருவரும் சேர்ந்து 351 ரன்கள் 3வது விக்கெட் கூட்டணி அமைத்தனர்.

    முதல் இன்னிங்ஸில் டெர்பி பாகிஸ்தான் வீரர் ஷான் மசூத்தின் 239 ரன்களுடனும் வெய்ன் மேடிசனின் 111 ரன்களுடனும் 505/8 என்று டிக்ளேர் செய்ய தொடர்ந்து ஆடிய சசெக்ஸ் அணி 174 ரன்களுக்குச் சுருண்டது. முதல் இன்னிங்சில் புஜாரா 6 ரன்களையே எடுக்க பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் ரிஸ்வான் 22 ரன்களையே எடுத்தார்.

    இதனையடுத்து பாலோ ஆன் வாங்கிய சசெக்ஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் சரிவரையாமல் தூண் போல் நின்ற கேப்டன் ஹெய்ன்ஸ் மற்றும் பாறையாகி நின்று டெர்பி வெற்றியை மறித்த புஜாரா ஆகியோரின் அபார இரட்டைச்சதங்களினால் 513/3 என்று பெரிய ஸ்கோரை எட்ட ஆட்டம் டிரா ஆனது.

    புஜாரா அவ்வளவு எளிதாகவும் ஆடிவிடவில்லை. சாம் கானர்ஸ், இலங்கை வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மல் ஆகியோர் புஜாராவை ஆட்டிப்படைத்தனர், பல பந்துகள் மட்டையை உரசிச்செல்லுமாறு அச்சுறுத்தியது. ஒருமுறை 64 ரன்னில் புஜாரா அவுட் ஆகியிருப்பார், ஆனால் தப்பினார். 27 மாதங்களுக்குப் பிறகு புஜாரா சதமெடுத்துள்ளார்.

    புஜாரா 326 பந்துகளில் தனது 150 ரன்களை நிறைவு செய்தார்,, 387 பந்துகளில் 201 என்று வந்தார். இறுதிவரை அவரை அகற்ற முடியவில்லை.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Cheteshwar Pujara

    அடுத்த செய்தி