பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா ஒரு இந்து. அவர் பாகிஸ்தானில் மதச்சிறுபான்மையினரான இந்துக்கள் மீது அடக்குமுறை ஏவிவிடப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அரசு இத்தகைய அடக்குமுறைகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்கிறார் டேனிஷ் கனேரியா. ஹிந்துக்கள் மீதான அடக்குமுறை சம்பவங்கள் பாகிஸ்தானுக்கு கெட்ட பெயரையே ஏற்படுத்தும் என்றார் டேனிஷ் கனேரியா.
இது தொடர்பாக செய்தி ஏஜென்சி ஒன்றிடம் கூறிய டேனிஷ் கனேரியா, “நான் ஒரு பெருமை மிக்க இந்து, அனைத்திற்கும் மேலாக சனாதன தர்மமே எனக்குப் பெரிது. ஆனால் அதே சமயத்தில் எந்த ஒரு மதத்தையும் நான் மதிக்கிறேன். பாகிஸ்தான் எனக்கு ஏகப்பட்ட அன்பையும் பாசத்தையும் நேசத்தையும் காட்டியுள்ளது. எனவே தான் சிறுபான்மையினர் நசுக்கப்படும் போது என் மனம் வேதனையடைகிறது.” என்றார்.
டேனிஷ் கனேரியா இது தொடர்பாக சமூக ஊடகமான Koo மற்றும் ட்விட்டரில் பதிவிட்ட வீடியோவில் இந்துக் கடவுள் சிலையை சேதம் செய்த விஷமிகளின் வெறிச்செயல் பதிவாகியுள்ளது. டிசம்பர் 20ம் தேதி கராச்சியில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கனேரியா இத்தகைய சம்பவங்களை கடுமையாகக் கண்டித்துள்ளார்.
இந்தச் செயல்களை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. நாட்டின் கவுரவத்துக்கு இது களங்கமாகும் என்று பதிவிட்டுள்ளார் கனேரியா. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானையும் தன் ட்விட்டர் பதிவில் டேக் செய்துள்ளார் கனேரியா.
“கராச்சியில் மதச்சுதந்திரம் தீய சக்திகளால் பாதிக்கப்பட்டு விடக்கூடாது. இது பாகிஸ்தான் மீதான மரியாதையை கெடுத்து விடும். பிரதமர் இம்ரான் கான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கனேரியா பதிவிட்டுள்ளார். “பாகிஸ்தானில் இதனைத் தடுக்க கடுமையான சட்டங்கள் வேண்டும். ஒரு இந்துவாக என் மதத்தை க் காக்க நான் விழைகிறேன்.” என்றார்.
டேனிஷ் கனேரியா 2000ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 19 வயதில் அறிமுகமானார். இவர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் ஆயுள் தடை விதிக்கப்பட்டார். கவுண்ட்டி கிரிக்கெட்டிலேயே சூதாட்டம் ஆடிய வீரர் இவர், அதே போல் புரோ லீக் மேட்ச்களிலும் சூதாட்டத்தில் விளையாடியிருக்கிறார் கனேரியா. இதுவரை 61 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய கனேரியா 261 விக்கெட்டுகளை 34.79 என்ற சராசரியில் எடுத்துள்ளார்.
Also Read: தென் ஆப்பிரிக்கா தொடர்: ரவி சாஸ்திரி, வாசிம் ஜாஃபர், மகாயா நிடினி ,மாறுபட்ட கருத்துகள்
வாசிம் அக்ரம் (414), வக்கார் யூனிஸ் (373), இம்ரான் கான் -362 விக்கெட்டுகளுக்குப் பிறகு டேனிஷ் கனேரியா 4ம் இடத்தில் உள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.