ஐ.பி.எல் தொடரில் இருந்து தோனி ஓய்வா? ரெய்னா சூசகப் பேச்சால் பரபரப்பு!

Probably you may see me more next year #IPL when dhoni is done: #SureshRaina | உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் தோனி அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவார் என்ற கருத்தை பலரும் கூறிவருகின்றனர்.

news18
Updated: May 3, 2019, 3:17 PM IST
ஐ.பி.எல் தொடரில் இருந்து தோனி ஓய்வா? ரெய்னா சூசகப் பேச்சால் பரபரப்பு!
களத்தில் ரெய்னா மற்றும் தோனி. (Twitter)
news18
Updated: May 3, 2019, 3:17 PM IST
அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல் தொடரில் இருந்து தோனி இருப்பாரா என்பது குறித்து சுரேஷ் ரெய்னா சூசகமாக பேசியுள்ளார்.

நடப்பு ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் இந்த வாரத்துடன் முடிவடைகின்றன. லீக் போட்டிகள் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும்.

பட்டியலில் மூன்று இடத்தில் இருக்கும், நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்டன.

சென்னை அணியைப் பொறுத்தவரை, தோனி இல்லாமல் களமிறங்கினால் மிக மோசமான தோல்வியை சந்திக்க நேரிடுகிறது. குறிப்பாக, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு எதிராக தோனி ஆடாததால் தோல்வியே கிடைத்தது.

Dhoni Batting, CSK, IPL
பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்ட தோனி. (BCCI)


பின்னர், கடைசியாக டெல்லிக்கு எதிரான போட்டியில் தோனி களமிறங்கி அணியை வெற்றி பெற வைத்தார். அத்துடன், ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

போட்டி முடிந்த பிறகு பேசிய சுரேஷ் ரெய்னா, “ஒரு கேப்டனாக தோனியை இழப்பது பெரிய இழப்பாக இல்லை. ஆனால், ஒரு பேட்ஸ்மெனாக அவரை இழப்பதுதான் பெரிதாக உள்ளது. இதனால், ஹைதராபாத், மும்பை அணிகளுக்கு எதிரான தோல்வி அடைந்தோம். தோனி கிரீஸுக்கு வந்தால் எதிரணியினருக்குக் கடும் நெருக்கடியாக இருக்கும். அவர் அணியில் இல்லாவிட்டால் வித்தியாசமாக நாங்கள் உணர்கிறோம்” என்று கூறினார்.

Suresh Raina, சுரேஷ் ரெய்னா
சுரேஷ் ரெய்னா. (AFP)


மேலும், “பேட்ஸ்மேனாகவும், ஆலோசகராகவும் தோனி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக அவர் (தோனி) முடித்துக் கொள்கிறார் என்றால் அடுத்த ஆண்டு என்னை அதிகம் நீங்கள் பார்க்கலாம். ஆனால், சென்னைக்காக அவர் விரும்பும் காலம்வரை விளையாடுவார்” என்று ரெய்னா கூறினார்.

ஏற்கனவே, உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் தோனி அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவார் என்ற கருத்தை பலரும் கூறிவருகின்றனர். தற்போது, சுரேஷ் ரெய்னாவின் பேட்டியும் உறுதிப்படுத்துவது போல இருக்கிறது.

சொன்னதை செய்து காட்டிய டேவிட் வார்னர்!

உலகத்திலேயே தோனி தான் சிறந்த கேப்டன் - பிராவோ

சூப்பர் ஓவர் பரபரப்பு! ஹைதராபாத்தை வீழ்த்தி ப்ளேஆஃப்க்குள் நுழைந்தது மும்பை அணி

Also Watch...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...