வரலாறு படைத்தார் பிரிதிவி ஷா: விஜய் ஹசாரே டிராபியில் 227 ரன்கள் விளாசி நாட் அவுட்- மும்பை 457 ரன்கள் குவிப்பு

வரலாறு படைத்தார் பிரிதிவி ஷா: விஜய் ஹசாரே டிராபியில் 227 ரன்கள் விளாசி நாட் அவுட்- மும்பை 457 ரன்கள் குவிப்பு

227 நாட் அவுட். விளாசிய பிரிதிவி ஷா.

இதன் மூலம் பிரிதிவி ஷா, சச்சின் டெண்டுல்கர், விரேந்திர சேவாக், ரோஹித் சர்மா, ஷிகர் தவண், சஞ்சு சாம்சன் யாஷஷ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் பட்டியலில் இணைந்தார்.

  • Share this:
    விஜய் ஹசாரே டிராபி 50 ஓவர்கள் கொண்ட ஒரு நாள் போட்டித் தொடரில் அதிரடி மன்னன் பிரிதிவி ஷா 227 ரன்கள் விளாசி நாட் அவுட்டாகத் திகழ்ந்து வரலாறு படைத்துள்ளார்.

    புதுச்சேரிக்கு எதிராக இன்று நடைபெற்ற எலைட் குரூப் டி போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் 2019-ம் ஆண்டு சஞ்சு சாம்சன் அடித்த 212 ரன்கள் என்ற சாதனைய முறியடித்து பிரிதிவி ஷா 227 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்து புதிய வரலாறு படைத்தார். சாம்சன் கோவாவுக்கு எதிராக இந்தச் சாதனையை நிகழ்த்தி தன் வசம் வைத்திருந்தது வியாழனன்று உடைந்தது.

    மொத்தம் 152 பந்துகளைச் சந்தித்த பிரிதிவி ஷா 31 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 227 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

    லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் தன் முதல் இரட்டைச்சதத்தை பிரிதிவி ஷா 142 பந்துகளில் விளாசினார். இதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் அடித்த 7-வது இந்திய வீரர் ஆனார் பிரிதிவி ஷா. விஜய் ஹசாரே டிராபி வரலாற்றில் 4வது இரட்டைச்சத வீரர் ஆனார்.

    2018 விஜய் ஹசாரே டிராபியில் உத்தரகண்டின் வீர் கவுஷல் 201ரன்கள் எடுத்ததே முதல் விஜய் ஹசாரே கோப்பை இரட்டைச் சதமாகும்.

    இவருடன் சேர்ந்து சூரியகுமார் யாதவ் வெளுத்து வாங்கினார், இவர் 58 பந்துகளில் 133 ரன்களை விளாசித்தள்ளினார். இதில் 22 பவுண்டரிகள் 4 சிக்சர்களை அடித்தார் சூரிய குமார் யாதவ். ஷாவும் யாதவும் இணைந்து 3வது விக்கெட்டுக்காக 201 ரன்களைச் சேர்த்தனர். மும்பை 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 457 ரன்கள் குவித்தது. இந்தியா ஏ அணியின் லிஸ்ட் ஏ ஸ்கோர் 458 என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியிலும் ஷா 132 ரன்களை விளாசியது குறிப்பிடத்தக்கது.

    சூரிய குமார் யாதவ் 27 பந்துகளில் அரைசதம் கண்டு 50 பந்துகளில் சதம் கண்டு கடைசியில் 58 பந்துகளில் 133 ரன்கள் விளாசினார்.

    இதன் மூலம் பிரிதிவி ஷா, சச்சின் டெண்டுல்கர், விரேந்திர சேவாக், ரோஹித் சர்மா, ஷிகர் தவண், சஞ்சு சாம்சன் யாஷஷ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் பட்டியலில் இணைந்தார்.

    புதுச்சேரி அணியில் பங்கஜ் சிங் 7 ஓவர்களில் 79 ரன்களையும் சாந்தமூர்த்தி 9 ஓவர்களில் 92 ரன்களையும் கொடுத்தனர். சாகர் திரிவேதி 9 ஓவர்களில் 99 ரன்கள் கொடுத்து பவுலிங்கில் ஒரு ரன்னில் சதத்தைத் தவற விட்டார். சுரேஷ் குமார் என்பவர் மட்டுமே அதிசயமாக 4 ஓவர் 22 ரன் ஒரு விக்கெட்
    Published by:Muthukumar
    First published: