5 ஆண்டு கால ஐபிஎல் வருமானத்தை ஆடம்பர கனவு இல்லத்தில் செலவழித்த பிரித்வி ஷா- மும்பையில் பெரிய சொத்தை வாங்கிப் போட்டார்
5 ஆண்டு கால ஐபிஎல் வருமானத்தை ஆடம்பர கனவு இல்லத்தில் செலவழித்த பிரித்வி ஷா- மும்பையில் பெரிய சொத்தை வாங்கிப் போட்டார்
மும்பையில் தன் கனவு இல்லத்தை கோடிக்கணக்கான ரூபாய்க்கு வாங்கிய பிரித்வி ஷா
இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா மும்பையில் பாந்த்ரா மேற்கு எனும் மிகவும் ‘பாஷ்’ ஏரியாவில் ரூ.10.5 கோடி பெறுமான தன் கனவு இல்லத்துக்குச் சொந்தக் காரர் ஆனார். அதாவது ரூ.10.5 கோடிக்கு பெரிய கனவு இல்லம் ஒன்றை வாங்கியுள்ளார் பிரித்வி ஷா.
இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா மும்பையில் பாந்த்ரா மேற்கு எனும் மிகவும் ‘பாஷ்’ ஏரியாவில் ரூ.10.5 கோடி பெறுமான தன் கனவு இல்லத்துக்குச் சொந்தக் காரர் ஆனார். அதாவது ரூ.10.5 கோடிக்கு பெரிய கனவு இல்லம் ஒன்றை வாங்கியுள்ளார் பிரித்வி ஷா.
பாந்த்ரா மறுசீரமைப்பில் உள்ள ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பு 81 ஆரியட் குடியிருப்பு கட்டிடத்தின் 8வது மாடியில் இருப்பதாக இகனாமிக் டைம்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. இந்த அபார்மெண்ட்டின் கார்ப்பெட் ஏரியா மட்டும் 2209 சதுர அடியாகும். 1654 சதுர அடி கூரை. 3 கார் பார்க்கிங் இடங்களும் உண்டு. மார்ச் 31ம் தேதி பிரித்வி ஷா இதற்காக ஸ்டாம்ப் டூட்டி மட்டுமே ரூ.52.50 லட்சம் செலுத்தியதாக மார்ச் 31ம் தேதியே செய்திகள் வெளியாகின. ஏப்ரல் 28ம் தேதி பதிவு செய்யப்பட்டது. முத்திரைத்தாள் தீர்வையை மகாராஷ்டிரா அரசு அதிகரிப்பதற்கு சற்று முன்னர் இந்த அபார்ட்மெண்ட்டை பிடித்துப் போட்டார் பிரிதிவி ஷா.
அதிகரிக்கப்பட்ட மெட்ரோ கூடுதல் செஸ் வரி ஏப்ரல் 2022 முதல் மும்பையில் நடைமுறைக்கு வந்தது. ஏப்ரல் 1ம் தேதி முதல் சராசியாக 5% ரெடி ரெக்கனர் ரேட்கள் உயர்த்தப்பட்டது.
பிரித்வி ஷா கிரிக்கெட் உலகில் தனக்கென ஒரு பெயரை செதுக்கிக் கொண்டார். அவரது ஐபிஎல் பயணத்திலும் இந்திய அணிக்காகவும் அவரது சரவெடி இன்னிங்ஸ்களுக்கு அனைத்து வரவேற்புகளூம் கிடைத்தன. ஷாவின் தலைமையில் இந்தியா 2018 இல் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றது.
அதே ஆண்டில், ஐபிஎல் ஏலத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் (தற்போது டெல்லி கேபிடல்ஸ்), பிரித்வி ஷாவை ரூ.1.2 கோடிக்கு வாங்கியது. ஐபிஎல் 2022 ஏலத்திற்கு முன்னதாக, டெல்லி ஷாவை ரூ.7.50 கோடிக்கு தக்க வைத்துக் கொண்டது. ஒட்டுமொத்தமாக ஐந்து சீசன்களில், டெல்லி கேப்பிடல்ஸிடம் இருந்து ரூ.12.30 கோடி சம்பாதித்துள்ளார் இளம் பிராடிஜி. இந்த ஆடம்பரமான சொத்துக்காக அவர் கிட்டத்தட்ட அனைத்தையும் செலவழித்ததாகத் தெரிகிறது.
டெல்லி அணி நேற்று ஹைதராபாத்தை வீழ்த்தி 10 புள்ளிகளுடன் 6ம் இடத்துக்கு முன்னேறிய ஆட்டத்தில் பிரித்வி ஷா இல்லை, அவரை ட்ராப் செய்தது குறிப்பிடத்தக்கது.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.