சச்சின், சேவாக் போல் விளையாடுகிறாரா பிரித்வி ஷா? - விராட் கோலி கருத்து

இளம் வீரர் பிரித்வி ஷா, சச்சின் மற்றும் சேவாக் உடன் ஒப்பிட்டு பேசப்பட்டு வரும் நிலையில், இதற்கு விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்

cricketnext
Updated: October 11, 2018, 4:33 PM IST
சச்சின், சேவாக் போல் விளையாடுகிறாரா பிரித்வி ஷா? - விராட் கோலி கருத்து
பிரித்திவி ஷா
cricketnext
Updated: October 11, 2018, 4:33 PM IST
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்த இளம் வீரர் பிரித்வி ஷா, சச்சின் மற்றும் விரேந்தர் சேவாக் உடன் ஒப்பிட்டு பேசப்பட்டு வரும் நிலையில், இதுதொடர்பாக கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் 18 வயதே ஆன பிரித்வி ஷாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. தன் முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய பிரித்வி ஷா சதம் விளாசி சாதனை படைத்தார்.

மிகக்குறைந்த வயதில் பிரித்வி ஷாவின் விளையாட்டு சச்சின் டெண்டுல்கரை நியாபகப்படுத்துவதாகவும், அவரின் அதிரடி ஆட்டம் பழைய சேவாக்கை போல உள்ளது என பல கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். நாளை தொடங்க உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் பிரித்வி அதிரடியை காட்டுவார் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பின் போது கேப்டன் விராட் கோலியிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ``ஒருவரை மற்றொருவருடன் ஒப்பிடக்கூடாது. எப்போதும் அழுத்தத்தை உணர்ந்து கொண்டிருக்கும் ஒரு இடத்தில் கொண்டு போய் அவரை உட்கார வைத்துவிடக் கூடாது. அவர் கிரிக்கெட்டை விரும்பி விளையாடுவதற்கான இடத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

ஐபிஎல் தொடர் இளம் வீரர்களுக்கு உதவியாக உள்ளது. ஐபிஎல் போன்ற தொடர்களில் மக்களின் முன் விளையாடுவதினால் பெரிய ஆட்டங்களில் இளம் வீரர்கள் விளையாடும் போது அந்தப் பதற்றம் அவர்களுக்கு இருப்பது இல்லை” என கோலி பதிலளித்தார்.

முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலியும் தனது 24-வது சதத்தை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
First published: October 11, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...