பிரிஸ்பேன் டெஸ்ட் : பந்தை எறிந்ததால் இளம்வீரர் மீது டென்ஷனான ரோஹித் சர்மா - வீடியோ

India vs Australia

இந்திய - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் | இன்றையப் போட்டியின் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனிக்கு காயம் ஏற்பட்டது.

 • Share this:
  பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியின் போது இளம் வீரர் ப்ரித்திவ் ஷாவின் தவறான த்ரோவால் பந்து ரோஹித் சர்மா மீது வேகமாக பட்டு சென்றது. இதனால் அவருக்கு காயம் ஏற்படவில்லை என்றாலும் சற்று டென்ஷனாக இருந்தார்.

  ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் தொடரின் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று பிரிஸ்பேன் மைதானத்தில் தொடங்கியது. இன்றையப் போட்டியில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்துள்ளது.

  இன்றையப் போட்டியின் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனிக்கு காயம் ஏற்பட்டது. இதனால் மாற்று வீரராக (substitute) ப்ரித்திவ் ஷா ஃபல்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது மார்னஸ் பேட்டிங்கின் போது சிங்கிள் ரன் எடுக்க ஓடினார். ரன்அவுட் செய்வதற்காக ப்ரித்திவ் ஷா ஓடி வந்து பந்தை ஸ்டெம்ப் மீது வீசினார். ஆனால் தவறுதலாக பந்து ரோஹித் சர்மா மீது பலமாக பட்டது. இதனால் ரோஹித் சர்மாவிற்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றாலும் சற்று டென்ஸனாக இருந்தார். பின்னர் ஓவர் முடிந்த உடன் ப்ரித்திவ் ஷா, ரோஹித் சர்மாவிடம் சென்று வருத்தம் தெரிவித்தார். அதன்பின் இருவரும் சகஜமாக பேசி கொண்டு சென்றனர்.  இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்திய வீரர்கள் பலர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகி உள்ள நிலையில் இதுப்போன்ற த்ரோ தேவை தானா என்று கருத்து தெரவித்து வருகின்றனர்.
  Published by:Vijay R
  First published: