கடைசி ஓவர் வீசுவதைவிட ஹிந்தி பேசுவதுதான் எனக்கு கடினம் என தமிழகத்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் கூறியுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் 2-வது ஒரு நாள் போட்டி நாக்பூரில் நேற்று முன்தினம் (மார்ச் 5) நடைபெற்றது.
முதலில் பேட் செய்த இந்திய அணி, கேப்டன் விராட் கோலியின் அபாரமான சதத்தால் 250 ரன்கள் எடுத்தது.
இதனை அடுத்து, களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 242 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் , இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றதால், தொடரில் 2-0 என்று முன்னிலை வகிக்கிறது.
இந்தப் போட்டியின் கடைசி ஓவரில், ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், சிறப்பாக பந்துவீசிய விஜய் சங்கர் கடைசி ஓவரில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார்.
வெற்றிக்குப் பிறகு, சாஹல் டிவிக்கு பேட்டி அளித்த விஜய் சங்கர், “உங்களுக்கு கடைசி ஓவர் வீசுவது கடினமா? இல்லை ஹிந்தி பேசுவது கடினமா? என்று கேள்விக்கு, சிரித்துக் கொண்டே ஹிந்தியில் பேசுவதுதான் கடினம்” என்று கூறியுள்ளார். இந்த வீடியோவை, பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அசத்தி வரும் விஜய் சங்கருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
“என் சொந்த வீட்டை நானே திறந்து வைக்கனுமா?” கிரிக்கெட் நிர்வாகிகளை நெகிழ வைத்த தோனி!
Also Watch...
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.