பிங்க் பந்து டெஸ்ட்டா? 36 ஆல் அவுட் கண்முன்னால வந்து போகுமே- புஜாரா என்ன கூறுகிறார்?

புஜாரா.

சென்ன பிட்ச் போல் குழிப்பிட்ச்தான் போடுவோம் அப்படித்தான் இருக்கும் என்று ரோஹித் சர்மா கூறிய பிறகும், இவர், “பிங்க் பந்து கொடுக்கும் கூடுதல் ஸ்விங் இங்கிலாந்துக்குச் சாதகமாக இருக்கும் என்கிறார்

 • News18
 • Last Updated :
 • Share this:
  விராட் கோலி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி சாதனைகள் பல புரிந்தாலும் அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் சமீபத்திய ஆஸ்திரேலியா தொடரில் பிங்க் பந்தில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி ஆகக்குறைந்த ரன் எண்ணிக்கையானது அது.

  இப்போது பிப்ரவரி 24ம் தேதி அகமதாபாதில் 3வது டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக டியூக் பிங்க் நிறப்பந்தில் நடைபெறுகிறது. இப்போது அந்த 36 ஆல் அவுட் கண் முன்னால வந்து போகுமா இல்லையா என்று இந்திய அணியின் புதிய சுவர் புஜாராவிடம் ஊடகம் ஒன்று கேட்ட போது, “அது ஆஸ்திரேலியா, பந்து ஸ்விங் ஆகியது.

  ஒரேயொரு மோசமான செஷன், ஒன்றரை மணி நேரம் மோசமாக ஆடினோம். அது பேரழிவி கொண்டு விட்டது. ஆனால் அந்த அடிலெய்ட் போட்டியில் நாம்தான் பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தினோம்.

  ஆனால் இங்கு நாம் நமக்கு தெரிந்த பழக்கப்பட்ட நிலைமைகளில் ஆடுகிறோம். பந்தும் அந்தப் பந்து அல்ல, வேறு பந்து. நன்றாக ஆடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

  நாங்கள் கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதை திரும்பிப் பார்க்கும் பழக்கமில்லை. இந்தக் கணத்தில் வாழ்ந்து நல்ல தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறோம். மேலும் அகமதாபாதில் பந்து எந்த அளவுக்கு ஸ்விங் ஆகும் என்று தெரியவில்லை. ஆட்டம் தொடங்கி கொஞ்ச நேரத்துக்கு இருக்கும். பிறகு போகப்போக ஸ்விங் இருக்காது. பிங்க் நிறப்பந்து நம்மை எதையும் எளிதில் கணிக்க விடாது.

  நான் நிறைய இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் ஆடியிருக்கிறேன் ஸ்விங் பந்துகளுக்கு எதிராக அது எனக்குக் கை கொடுக்கும் என்று நம்பிக்கையுள்ளது, என்றார் புஜாரா.

  ஆனால் இங்கிலாந்து வீரர் ஜாக் கிராலி பாவம் அப்பாவியாக இருப்பார் போல் தெரிகிறது. சென்ன பிட்ச் போல் குழிப்பிட்ச்தான் போடுவோம் அப்படித்தான் இருக்கும் என்று ரோஹித் சர்மா கூறிய பிறகும், இவர், “பிங்க் பந்து கொடுக்கும் கூடுதல் ஸ்விங் இங்கிலாந்துக்குச் சாதகமாக இருக்கும் இந்திய வீரர்கள் ஸ்விங் ஆகும் பந்துகளை சரியாக ஆட மாட்டார்கள்” என்றார்.
  Published by:Muthukumar
  First published: