ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆடும் லெவனில் இடம் பெறப்போகும் வீரர்கள் யார்?

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆடும் லெவனில் இடம் பெறப்போகும் வீரர்கள் யார்?

மாதிரி படம்

மாதிரி படம்

இதுவரை இரு அணிகளும் 87 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது, இதில் தென் ஆப்பிரிக்கா அணி 49 ஆட்டங்களிலும், இந்திய அணி 35 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டிக்கான ஆடும் லெவன் அணியில் யார் யார் இடம் பிடிப்பார்கள் என்பதை பார்ப்போம்..

    இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள தென் ஆப்பிரிக்கா அணி மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில் இரு அணிகளுக்கான ஒருநாள் தொடர் நாளை லக்னோவில் நடைபெறுகிறது.

    இதுவரை இரு அணிகளும் 87 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது, இதில் தென் ஆப்பிரிக்கா அணி 49 ஆட்டங்களிலும், இந்திய அணி 35 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த தொடருக்கு இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் டி20 உலகக்கோப்பை விளையாடுவதற்காக கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலியா செல்வதற்கு தயாராகி வரும் நிலையில் மாற்று அணியை இந்தியா அறிவித்துள்ளது.

    Also Read: பும்ராவிற்கு பதில் மாற்று வீரர் யார்? குழப்பத்தில் இருக்கும் இந்திய அணியில் இடம் பிடிக்கபோவது யார்? ஒர் அலசல்

    அதன்படி தென் ஆப்பிரிக்காக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியில் முதல் ஒருநாள் போட்டியில் யார் இடம் பிடிப்பார்கள் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. அதன்படி நாளை தொடக்க வீரர்களாக,கேப்டன் ஷிகர் தவானும் அவருடன் சுப்மல் கில்லும் களமிறங்க வாய்ப்புள்ளது. ஸ்ரேயல் ஐயர், இஷான் கிஷான், ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், சபாஷ் அகமது, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், ரவி பிஷ்னாய், முகமது சிராஜ் உள்ளிட்டோர் வீரர்கள் நாளை இடம் பிடிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    Published by:Arunkumar A
    First published:

    Tags: India vs South Africa