சிஎஸ்கே: யார் அந்த 11 பேர்?

சென்னை - மும்பை அணிகள் மோதும் போட்டி இன்று இரவு 8 மணிக்கு சென்னையில் தொடங்கிறது

சிஎஸ்கே: யார் அந்த 11 பேர்?
சென்னை சூப்பர் கிங்ஸ்
  • News18
  • Last Updated: April 26, 2019, 6:21 PM IST
  • Share this:
சிஎஸ்கே அணியில் இன்று விளையாடப்போகும் வீரர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.

மும்பை - சென்னை அணிகள் போதும் போட்டி சென்னையில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. சென்னை அணிக்கு எதிரான முதல் போட்டியில் மும்பை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் 2-வது போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று பழி தீர்க்க சென்னை அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை அணியின் தொடக்க வீரர் டூ பிளெசிஸ் தனது பங்களிப்பை ஓரளவுக்கு தருகிறார். ஆனால், வாட்சன் கடந்த சில போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை இதனால் அவரை அணியில் இருந்து நீக்குவது குறித்து பேச்சு எழுந்தது. ஆனால் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 96 ரன்கள் விளாசி அசத்தினார்.


அடுத்தடுத்து வரிசைகளில் ரெய்னா, ராயுடு, ஜாதவ், தோனி, பிராவோ, ஜடேஜா ஆகியோர் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கலாம். பந்துவீச்சில் ஜடேஜா, ப்ராவோ, ஹர்பஜன் சிங், தீபக் சாஹர், இம்ரான் தாஹிர் உள்ளிட்டோர் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றனர்

சி.எஸ்.கே உத்தேச அணி: ஷேன் வாட்சன், டூ பிளசிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், தோனி, ஜடேஜா, ப்ராவோ, ஹர்பஜன் சிங், தீபக் சாஹர், இன்ரான் தாஹிர்

Also watch
First published: April 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்