ஹைதராபாத் வீரர்களுக்குத்தான் இப்படி நடக்கிறது: முன்னாள் கிரிக்கெட் வீரர் ட்வீட்டால் சர்ச்சை!

#PragyanOjha posts cryptic tweet on #AmbatiRayudu’s exclusion from #WorldCupsquad | கடந்த சில நாட்களுக்கு முன்பு, விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. #TeamIndia

news18
Updated: April 19, 2019, 7:20 PM IST
ஹைதராபாத் வீரர்களுக்குத்தான் இப்படி நடக்கிறது: முன்னாள் கிரிக்கெட் வீரர் ட்வீட்டால் சர்ச்சை!
முன்னாள் கிரிக்கெட் வீரர் பிராக்யன் ஓஜா.
news18
Updated: April 19, 2019, 7:20 PM IST
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் பிராக்யன் ஓஜா பதிவிட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

12-வது 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் மே 30-ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் ஆல் ரவுண்டர் விஜய் சங்கர், மூத்த பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

Ambati Rayudu, அம்பதி ராயுடு


மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அம்பதி ராயுடுவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதுகுறித்து தேர்வுக்குழு தலைவர் எம்.கே.பிரசாத் கூறுகையில், “அம்பதி ராயுடுவுக்கு சில வாய்ப்புகள் கொடுத்தோம். ஆனால், விஜய் சங்கர், பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என 3 பரிமாணங்களில் அசத்துவதால் அவருக்கு வாய்ப்பு அளித்தோம்” என தெரிவித்தார்.

உலகக்கோப்பை அணியில் இடம் கிடைக்காத கோபத்தில் அம்பதி ராயுடு தனது ட்விட்டரில், “உலகக்கோப்பை போட்டிகளைப் பார்ப்பதற்காக, இப்போதுதான் புதிய 3டி கிளாஸ்களை ஆர்டர் செய்தேன்” என கிண்டல் செய்து பதிவிட்டார்.இந்த ட்வீட்டுக்கு பதிலளித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் பிராக்யன் ஓஜா, “சில ஹைதராபாத் கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டும் இப்படி நடக்கிறது. நானும் இதே சூழ்நிலைக்கு ஆளாகிருக்கிறேன்” என கூறியுள்ளார்.பிராக்யன் ஓஜா, இந்திய அணிக்காக 24 டெஸ்ட்களில் விளையாடி 113 விக்கெட்டுகளையும், 18 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இவரின் ட்வீட்டால் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

VIDEO: தல தோனிக்கே பிடித்த ஹெலிகாப்டர் ஷாட்... ஹர்திக் பாண்டியா ஓபன் டாக்!

சர்வதேச கிரிக்கெட் வீரர் திடீர் மரணம்.. ரசிகர்கள் சோகம்!

தோனி ஸ்டம்புக்குப் பின்னால் இருப்பது எனது அதிர்ஷ்டம்: கோலி புகழாரம்.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..!

விளையாட்டு உலகில் பரபரப்பு... இரு கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம்..!

உலகக்கோப்பைக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு... இந்தியாவை சமாளிக்க புதிய திட்டம்!

தல தோனி எப்போது அணிக்கு திரும்புவார்? ரெய்னாவின் பதிலால் ரசிகர்கள் உற்சாகம்!

தோத்தாலும் ஜெயிச்சாலும் மீசைய முறுக்கு... தோல்விக்குப் பிறகு மைதானத்துக்கு வந்த தோனி!

ஐபிஎல் போட்டியிலிருந்து தோனி விலகியதற்கு இதுதான் காரணமா?

ஹைதராபாத் மைதானத்தில் சி.எஸ்.கே கொடி, தோனி படத்துக்கு அனுமதி மறுப்பு: ரசிகர்கள் குமுறல்!

தோனி இருக்கும்போது எனக்கு என்ன வேலை? உண்மையை உடைத்த தினேஷ் கார்த்திக்!
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...