அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் பிரபல இந்திய வீரர் ஓய்வு அறிவிப்பு...!

அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் பிரபல இந்திய வீரர் ஓய்வு அறிவிப்பு...!
பிரக்யான் ஒஜா,
  • Share this:
இந்திய அணி சுழற்பந்துவீச்சாளரான பிரக்யான் ஒஜா அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் 33 வயதான ஒஜா. 2008-ம் ஆண்டு இந்திய அணிக்காக தனது முதல் ஒரு நாள் போட்டியில் களமிறங்கி உள்ளார். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், தனக்கு இதுவரை ஆதரவளித்த வந்த ரசிகர் அனைவருக்கும் நன்றி. தனது வாழ்வில் அடுத்தக்கட்டத்திற்கு செல்லக் கூடிய நேரம் இது என்றும் பதிவிட்டுள்ளார்.




இந்திய அணிக்காக 18 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஒஜா 652 ரன்கள் மற்றும் 21 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். டெஸ்டில் 24 போட்டிகளில் விளையாடி 113 விக்கெட்களை வீழ்த்தியும், 3420 ரன்கள் விளாசியும் உள்ளார். 7 முறை டெஸ்ட் போட்டிகளில் 5 விக்கெட்களை எடுத்துள்ளார்.

Also Read : தோனியின் 'சூப்பர் பாடி கார்ட்'... யார் இந்த லேடி? இணையத்தில் வைரலாகும் வீடியோ 

ஒஜா கடைசியாக மும்பையில் 2013ம் ஆண்டு சச்சின் ஓய்வு பெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார். ஒஜா, ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன் அணிக்காக விளையாடி வந்தார் என்பது குறிப்பிடதக்கது.
First published: February 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்