Home /News /sports /

செஸ்: போலந்து வீரரிடம் பிரக்ஞானந்தா போராடி தோல்வி

செஸ்: போலந்து வீரரிடம் பிரக்ஞானந்தா போராடி தோல்வி

பிரக்ஞானந்தா

பிரக்ஞானந்தா

சாம்பியன்ஸ் செஸ் தொடரின் 6வது சுற்றில் இந்தியாவின் 17 வயது வீரரான சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா போலந்து வீரர் கிரைஸ்டாஃப் டுடாவிடம் தோல்வி அடைந்தார், இது தொடர்ச்சியான 2வது தோல்வியாகும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    சாம்பியன்ஸ் செஸ் தொடரின் 6வது சுற்றில் இந்தியாவின் 17 வயது வீரரான சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா போலந்து வீரர் கிரைஸ்டாஃப் டுடாவிடம் தோல்வி அடைந்தார், இது தொடர்ச்சியான 2வது தோல்வியாகும்.

    முந்தைய சுற்றில் குவாங் லியம் லீ என்பவரிடமும் பிரக்ஞானந்தா தோல்வி அடைந்தார். ஆனாலும் 13 புள்ளிகளுடன் மாக்னஸ் கார்ல்சனுக்கு அடுத்ததாக் 2ம் இடத்தில் உள்ளார்.

    முதல் போட்டியில் டுடா அற்புதமாகா ஆடி 47வது நகர்வில் பிரக்ஞானந்தாவை முறியடித்தார். அடுத்த 2 சுற்றுக்கள் ட்ராவில் முடிய கடைசி போட்டியில் பிரக்ஞானந்தா வென்று சனம் செய்தார்.
    இதையடுத்த் டைபிரேக்கருக்குச் சென்றது ஆட்டம், இதில் டுடா தனது கிளாஸ் ஆட்டத்தைக் காட்டி, 2-லும் வென்றார்.

    இதனையடுத்து டுடா 4-2 என்று வெற்றி பெற்றார்.
    6 சுற்றுக்களின் முடிவில் பிரக்ஞானந்தா 13 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் இருக்கிறார். கடைசி சுற்றில் பிரக்ஞானந்தாவும் உலக நம்பர் 1 கார்ல்சனும் மோதுகின்றனர்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Chess, Praggnanandhaa, Sports Player

    அடுத்த செய்தி