மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி, பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா உடன் இன்று பலப்பரீட்சை நடத்த இருக்கிறது.
10 அணிகள் மோதும் 6-வது மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதில், புரோவிடென்சியில் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் ‘பி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, 3 முறை உலகச் சாம்பியனான ஆஸ்திரேலியா உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது. நடப்பு சீசனில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் முதல் முறையாக நேருக்கு நேர் சந்திக்கின்றன. இரு அணிகளும் தங்கள் பிரிவில் இடம் பிடித்துள்ள மற்ற அணிகளான பாகிஸ்தான், நியூசிலாந்து, அயர்லாந்து ஆகிய அணிகளை வீழ்த்தி தோல்வியே சந்திக்காமல் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
‘பி’ பிரிவில் முதல் இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கில் வலுவாக உள்ளது. அதேபோல், ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, பேட்டிங் மற்றும் சுழற்பந்து வீச்சில் மிரட்டக்கூடியது. இரு அணிகளும் இதுவரை 14 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், ஆஸ்திரேலியா 11 முறையும், இந்திய அணி 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
இது குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், “அரையிறுதிக்கு முன்னேறியது மகிழ்ச்சியாக இருந்தாலும், இன்னும் சில விஷயங்களில் நாங்கள் முன்னேற்றம் காண வேண்டியுள்ளது. அதேபோல், ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டும் என்றால் எல்லாவற்றிலும் சிறப்பாக விளையாட வேண்டும்” என்றார்.
இரு அணிகளிலும் சமபலத்துடன் இருப்பதால், இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்திய அணி விபரம்:
ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), தனியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ஏக்தா பிஸ்த், ஹேமலாதா, மன்சி ஜோஷி, வேதா கிருஷ்ணமூர்த்தி, ஸ்மிருதி மந்தனா, அஞ்சா பட்டீல், மிதாலி ராஜ், அருண்தாட்டி ரெட்டி, ஜெமீமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, தேவிகா வைதியா, பூனம் யாதவ், ராதா யாதவ்.
ஆஸ்திரேலிய அணி விபரம்:
மேக் லேனிங் (கேப்டன்), நிக்கோல் போல்டன், நிக்கோலா கேரே, அசுலே கார்ட்னர், ரேச்சல் ஹேன்ஸ், அலிஸ்ஸா ஹீலி, ஜெஸ் ஜோனசென், டெலிசா கிம்மின்ஸ், சோஃபி மொலைன்ஸ், பெத் மூனி, எல்லி பெர்ரி, மேகன் ஷட், எலிஸ் வில்லானி, ஜோர்ஜியா வேர்க்கம்.
Also See...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.