ஷிகார் தவான் விலகல்! இங்கிலாந்து புறப்படுகிறார் ரிஷப் பாண்ட்?

ICC World Cup 2019 | Team India | ஷிகார் தவானுக்கு இணையான இடதுக்கை வீரர் தேவை என்றால் அது ரிஷப் பண்டாக தான் இருக்க முடியும்.

Vijay R | news18
Updated: June 11, 2019, 9:06 PM IST
ஷிகார் தவான் விலகல்! இங்கிலாந்து புறப்படுகிறார் ரிஷப் பாண்ட்?
ஷிகார் தவான் - ரிஷப் பண்ட்
Vijay R | news18
Updated: June 11, 2019, 9:06 PM IST
இந்திய அணியின் தொடக்க வீரர் தவானுக்கு ஏற்பட்ட காயம் தீவிரமடைந்துள்ளதால்அவருக்கு மாற்று வீரராக ரிஷப் பண்ட் விரைவில் இங்கிலாந்து புறப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் கம்மின்ஸ் வீசிய பந்து ஷிகார் தவான் கைவிரலில் பட்டதால் தவான் காயமடைந்தார். காயத்தின் காரணமாக ஷிகார் தவான் அடுத்த 3 வாரத்திற்கு விளைாயாடமல் ஓய்வில் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டது. ஷிகார் தவானின் கைவிரலை ஸ்கேன் செய்து பார்த்தன் முடிவில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஷிகார் தவான் விலகி உள்ளதால் இந்திய அணியின் ஓபனிங்கை வலுப்படுத்த டெல்லி வீரர் ரிஷப் பண்ட் இங்கிலாந்து செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த 48 மணி நேரத்திற்குள் ரிஷ்ப பண்ட் இங்கிலாந்து செல்ல திட்டமிட்டு உள்ளனர்.

உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் ரிஷப் பண்ட் இடம் பெறவில்லை. தோனிக்கு மாற்று கீப்பராக திணேஷ் கார்த்தி தேர்வு செய்யப்பட்டார். அனுபவ வீரராக திணேஷ் கார்த்தி இருப்பதால் அவரை தேர்ந்தெடுத்ததாக தேர்வு குழுவினர் தெரிவித்து இருந்தனர்.

நியூசிலாந்திற்கு எதிரான அடுத்த போட்டியில் கே.எல்.ராகுல் ஓபனிங் விளையாடுவார் என்றாலும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இடது கை ஆட்டக்காரர் தேவை. ஷிகார் தவானுக்கு இணையான இடதுகை வீரர் தேவை என்றால் அது ரிஷப் பண்டாக தான் இருக்க முடியும்.

அதிரடியாக விளையாடும் ரிஷப் பண்ட் இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுப்பார் என இந்திய கிரிக்கெட் நிர்வாகம் கணித்துள்ளது. இதனால் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரிஷப் பண்ட் இடம்பெற விரைவில் இங்கிலாந்து புறப்பட உள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Watch

First published: June 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...