• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • இந்திய கிரிக்கெட் வீரர்கள் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி சாப்பிட தடை!

இந்திய கிரிக்கெட் வீரர்கள் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி சாப்பிட தடை!

இந்திய கிரிக்கெட் அணி

இந்திய கிரிக்கெட் அணி

எந்த வகையிலும் மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சி ( Beef And Pork)ஆகியவற்றை உட்கொள்ளக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் இந்திய அணி வீரர்கள் ஹலால் முறையில் சமைக்கப்பட்ட உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

  • Share this:
    இந்திய கிரிக்கெட் வீரர்கள் மாட்டிறைச்சி,  பன்றி இறைச்சி ஆகியவற்றை சாப்பிட தடை விதித்துள்ளதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி சுற்றுக்கு கூட முன்னேறாமல் இந்திய அணி வெளியேறியது ரசிகர்களை சோகம் கொள்ள செய்தது. எனினும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் 3-0 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்று பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ளது. இது ஒருபுறம் இருக்க வீரர்களின் உணவு தொடர்பாக பிசிசிஐ புதிதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

    நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது  டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெறவுள்ளது. விராத் கோலி ஓய்வில் உள்ளதால் ரஹானே இந்த ஆட்டத்தில் இந்திய அணிக்கு தலைமை தாங்க உள்ளார். இந்நிலையில் போட்டியில் விளையாடும் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான டயட் பிளான் குறிப்புகள் வெளியாகியுள்ளது.

    அதில்,  இந்திய கிரிக்கெட் வீரர்கள் எந்த வகையிலும் மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சி ( Beef And Pork)ஆகியவற்றை உட்கொள்ளக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், வீரர்கள் ஹலால் முறையில் சமைக்கப்பட்ட உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும் என்றும் உணவுக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



    விலங்குகளை இறைச்சிக்காக வெட்டுவதில் இரண்டு வகை உண்டு. ஹலால் முறை என்பது விலங்கை வெட்டி ரத்தம் முழுமையாக வெளியேறும் வரை காத்திருந்து பின்னர் வெட்டுவது. ஜட்கா முறை என்பது ஆடு கோழி போன்றவற்றை வெட்டும்போது ஒரே வெட்டில் தலை தனியாக உடல் தனியாக துண்டாக்குதல் ஆகும்.  பிசிசிஐயின் உணவு முறை தொடர்பான அறிவிப்புகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் ஒருசிலர்  சர்ச்சையை கிளப்பி உள்ளனர்.

    இதையும் படிங்க: டெஸ்ட் தொடரிலிருந்து கே.எல்.ராகுல் திடீர் விலகல்- சூரியகுமார் யாதவ் சேர்ப்பு

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: