டெல்லிக்கு ஒரு நாளும் அடிபணிய மாட்டோம் - சிஎஸ்கே வெற்றி குறித்து பிரபல இயக்குநர் ட்வீட்

சிஎஸ்கே

சென்னை அணி மும்பை அணியுடன் இறுதிப்போட்டியில் நாளை மோத உள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    டெல்லிக்கு ஒரு நாளும் அடி பணிய மாட்டோம் என்று இயக்குநர் அமுதன் தனது ட்விட்டர் பக்கத்தில்
    பதிவிட்டுள்ளார்.

    சென்னை-டெல்லி அணிகள் மோதிய போட்டி நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று
    பந்துவீச்சை தேர்வு செய்தது சென்னை அணி.

    முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 9
    விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை எடுத்தது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அதிகபட்சமாக 38
    ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

    சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டூ பிளசிஸ் மற்றும் ஷேன் வாட்சன் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் சென்னை அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இந்த ஜோடி 81 ரன்களை சேர்த்தது. டூ
    பிளசிஸ் 39 பந்துகளில் 50 ரன்கள் விளாசி அவுட்டானார். இதையடுத்து அதிரடியாக விளையாடிய வாட்சன் 32
    பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.



    இறுதியாக சென்னை அணி 19 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதனால் சென்னை அணி மும்பை அணியுடன் இறுதிப்போட்டியில் நாளை மோத உள்ளது.

    சென்னை அணி வெற்றி பெற்றதை அடுத்து இயக்குநர் அமுதன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘டெல்லிக்கு ஒரு
    நாளும் அடி பணிய மாட்டோம்’ என்று பதிவிட்டுள்ளார்.



    Also watch

    Published by:Prabhu Venkat
    First published: