“வா.. வா.. மஞ்சள் மலரே“ பூனம் யாதவிற்கு சி.எஸ்.கே வரவேற்பு

“வா.. வா.. மஞ்சள்  மலரே“ பூனம் யாதவிற்கு சி.எஸ்.கே வரவேற்பு
பூனம் யாதவ்
  • Share this:
மகளிர் ஐ.பி.எல் நடைபெற்றால் சென்னை அணியில் விளையாட விரும்புவதாக சுழற்பந்து வீச்சாளர் பூனம் யாதவ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல் தொடர் கொரோனா அச்சம் காரணமாக ஏப்ரல் 15-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உலகக்கோப்பை அரையிறுதி போட்டிக்கு பின் இந்திய அணியில் இடம்பெறாத தோனியின் ஆட்டத்தை ஐ.பி.எல் தொடரில் பார்த்து ரசிக்கலாம் என்று ஆவலுடன் இருந்த ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

மகளிர் ஐ.பி.எல் தொடர் நடத்த வேண்டுமென்று என்றும் இந்திய வீரராங்கனைகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனிடையே பெண்கள் மகளிர் ஐ.பி.எல் தொடர் நடைபெற்றால் எந்த அணியில் விளையாட உங்களுக்கு விருப்பம் என்று ரசிகர் ஒருவர் பூனம் யாதவிடம் கேள்வி எழுப்பினார்.


அந்த கேள்விக்கு சென்னை அணிக்கு பந்துவீச வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன் என்று பதிலளித்திருந்தார். இதற்கு சி.எஸ்.கே அணியும் வரவேற்பு கொடுத்துள்ளது.சி.எஸ்.கே அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பூனம் யாதவிற்கு வரவேற்பு தெரிவித்து வா.. வா.. மஞ்சள் மலரே என்று பதிவிட்டுள்ளது.
First published: March 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்