Home /News /sports /

கடைசியாக ஷேன் வார்ன் ஒருமுறை உயிருடன் வந்தால்.. - கண்ணீருடன் பாண்டிங் கூற விரும்பும் அந்த 3 வார்த்தைகள்

கடைசியாக ஷேன் வார்ன் ஒருமுறை உயிருடன் வந்தால்.. - கண்ணீருடன் பாண்டிங் கூற விரும்பும் அந்த 3 வார்த்தைகள்

ஷேன் வார்ன் மறைவு குறித்து கண்ணீர் மல்க பாண்டிங் பேட்டி

ஷேன் வார்ன் மறைவு குறித்து கண்ணீர் மல்க பாண்டிங் பேட்டி

மறைந்த லெக் ஸ்பின் லெஜண்ட் ஷேன் வார்ன் கடைசியாக ஒருமுறை உயிரோடு வந்தால் அவரிடம் தான் இதுவரை கூறாது விட்ட அந்த 3 வார்த்தைகளைக் கூற விரும்புவதாக முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் கண்ணீர் மல்க குறிப்பிட்டார்.

    மறைந்த லெக் ஸ்பின் லெஜண்ட் ஷேன் வார்ன் கடைசியாக ஒருமுறை உயிரோடு வந்தால் அவரிடம் தான் இதுவரை கூறாது விட்ட அந்த 3 வார்த்தைகளைக் கூற விரும்புவதாக முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் கண்ணீர் மல்க குறிப்பிட்டார்.

    தி ஐசிசி ரிவியூவின் சமீபத்திய பதிப்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இசா குஹாவிடம் பேசிய பாண்டிங், அதிர்ச்சியூட்டும் செய்தி தன்னை எவ்வாறு பாதித்தது என்பதை வெளிப்படுத்தினார், மேலும் வார்னுடன் அவர் ஒரு இறுதி உரையாடலை நடத்தியிருந்தால் அவர் என்ன சொல்லியிருப்பார் என்பதை வெளிப்படுத்தினார்.

    பாண்டிங் கண்ணீருடன் கூறியதாவது, "நான் அவரை எவ்வளவு நேசிக்கிறேன் என்று கூறுவேன், ஒரு இறுதி உரையாடலுக்கு வாய்ப்பு கிடைத்தால் "நான் அவரிடம் இதுவரை சொல்லாத ‘நான் அவரை எவ்வளவு நேசிக்கிறேன்’ என்ற இந்த வார்த்தைகளைக் கூற விரும்புகிறேன். அதைச் செய்ய விரும்புகிறேன்."

    "நான் அன்று நல்ல மனநிலையில்தான் காலையில் எழுந்தேன், சீக்கிரம் நான் குழந்தைகளை நெட்பால் விளையாடத் தயார்படுத்தினேன், ரியானா (பாண்டிங்கின் மனைவி) தனது போனைப் பார்த்து வார்னியைப் பற்றிய செய்தியை என்னிடம் கூறினார்.

    நான் அதைப் பார்க்க அவள் கையிலிருந்து தொலைபேசியைப் பிடுங்கினேன், என்னால் அதை நம்ப முடியவில்லை, அது இப்போதும் அப்படியே உள்ளது.

    இது எனக்கு மிகவும் மோசமாக இருந்தது, என்னால் உண்மையில் பேச முடியவில்லை, ஒவ்வொரு முறையும் அவரைப் பற்றியும் எங்கள் அனுபவங்கள் மற்றும் எங்கள் பயணத்தைப் பற்றியும் நினைக்கும் போது நான் வார்த்தைகள் வராமல் தவித்தேன்.

    இன்றும் நான் டிவியில் அஞ்சலிகளைப் பார்த்து வருகிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும் அவரது குரலைக் கேட்கும்போது நான் டிவியை அணைக்க வேண்டும் என்றே தோன்றியது, என்னால் தாங்க முடியவில்லை.

    "இது ஒரு கடினமான இரண்டு நாட்கள், ஆனால் நான் அதிக கவனம் செலுத்த வேண்டிய விஷயங்களைப் பற்றி இது எங்களுக்கு இன்னும் கொஞ்சம் விழிப்பூட்டுகிறது, மேலும் நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் உள்ளன."

    "அவர் தனது வர்ணனை மூலம் ஆசிரியராக இருந்தார், கடந்த 24 மணிநேரத்தில் அவர் பணியாற்றிய அனைத்து சுழற்பந்து வீச்சாளர்களின் நூற்றுக்கணக்கான புகைப்படங்களை நான் பார்த்திருக்கிறேன்.

    ஸ்டீவ் ஸ்மித்தின் அவரது ஆரம்ப நாட்களில் ஸ்பின் பயிற்சி அளித்திருக்கிறார், ஆப்கான் ஸ்பின்னர் ரஷீத் கான் அவரை நாடியுள்ளார், என்ன மாதிரியான உரையாடல்களாக அவை இருக்கும். அவர்கள் நடத்திய உரையாடல்களை கற்பனை செய்து பாருங்கள்."

    என்றா பாண்டிங் கண்ணீரை அடக்க முடியாமல்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Shane Warne

    அடுத்த செய்தி