இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பொலார்ட் மீது ஒழுங்கு நடவடிக்கை!

Web Desk | news18
Updated: August 6, 2019, 5:31 PM IST
இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பொலார்ட் மீது ஒழுங்கு நடவடிக்கை!
பொலார்ட்
Web Desk | news18
Updated: August 6, 2019, 5:31 PM IST
இந்தியாவிற்கு எதிரான 2வது டி20 போட்டியில் மேற்கிந்திய வீரர் பொலார்ட் மீது ஐசிசி ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் 2வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் ரோஹித் சர்மா 67 ரன்கள் குவித்தார்.

மேற்கிந்திய தீவுகள் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் 15.3வது ஓவரில் மழை குறுக்கிட்டது. மழை குறுக்கிட்ட போது மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்திருந்தது. மழை தொடர்ந்து பெய்ததால் இந்திய அணி  டக்வத் லூயிஸ் முறைப்படி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் போது மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் பொலார்ட் மாற்று வீரரை களத்திற்கு அழைத்து உள்ளார். இதற்கான வேண்டுகோளை முன்னரே வைக்க வேண்டும். நடுவர்கள் அனுமதி வழங்கிய பிறகே மாற்றுவீரரை களத்திற்குள் அழைக்க வேண்டும்.

ஆனால் நடுவர் பொலார்டை பலமுறை அறிவுறுத்தியும் அவர் மீண்டும் மாற்று வீரரை அழைத்து உள்ளார். அடுத்த ஓவர் முடியும் வரை பொலார்ட்டை காத்திருக்க அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் அதற்கு மறுத்து உள்ளார்.

இது தொடர்பாக களநடுவர்கள் பொலார்ட் மீது புகார் அளித்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஐசிசியிடம் பரிந்துரைத்துள்ளனர். இதனை விசாரித்த ஐசிசி, பொலார்ட் ஊதியத்தில் 20 சதவீதம் அபதாரம் விதித்தும், ஒரு தகுதியிழப்பு புள்ளியும் வழங்கி தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.

Watch Also:

First published: August 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...