Home /News /sports /

பொலார்ட் ‘600’ - சாதனை

பொலார்ட் ‘600’ - சாதனை

பொலார்டு

பொலார்டு

மும்பை இந்தியன்ஸின் முடிசூடா மன்னனான மே.இ.தீவுகளின் அதிரடி ஆல்ரவுண்டர் கிரன் பொலார்ட் டி20 ஆட்டங்களில் 600 போட்டிகளில் ஆடி சாதனை புரிந்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    மும்பை இந்தியன்ஸின் முடிசூடா மன்னனான மே.இ.தீவுகளின் அதிரடி ஆல்ரவுண்டர் கிரன் பொலார்ட் டி20 ஆட்டங்களில் 600 போட்டிகளில் ஆடி சாதனை புரிந்துள்ளார்.

    இங்கிலாந்தில் தி ஹண்ட்ரட் என்ற 100 பந்துகள் தொடர் நடைபெற்று வருகிறது, இதையும் டி20 என்றே அங்கீகரித்துள்ளனர். இந்தத் தொடரில் பொலார்ட் லண்டன் அணிக்காக ஆடினார். மான்செஸ்டர் அணிக்கு எதிரான போட்டியில் பொலார்ட் 11 பந்துகளில் 34 ரன்களை விளாசித்தள்ளினார். லண்டன் அணி 100 பந்துகளில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது.

    தொடர்ந்து ஆடிய மான்செஸ்டர் அணி 108 ரன்களையே எடுக்க முடிந்தது, இதனையடுத்து லண்டன் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இது பொலார்ட் பங்கேற்ற 600வது டி20 போட்டியாக அமைந்தது. இதுவரை 11,709 ரன்களை எடுத்த பொலார்ட், 309 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இந்த மைல்கல்லை எட்டிய முதல் வீரர் ஆனார் பொலார்ட்.

    சக வெஸ்ட் இண்டீஸ் வீரர் டிவைன் பிராவோ 543 போட்டிகளிலும் பாகிஸ்தானின் ஷோயப் மாலிக் 472 போட்டிகளிலும் யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்ல் 463 போட்டிகளிலும் ஆடி சாதனை புரிந்துள்ளனர். இங்கிலாந்தின் ரவி பொபாரா 426 ஆட்டங்களில் ஆடியுள்ளார்.

    இப்போது பொலார்ட் 600 டி20 போட்டிகளில் ஆடிய மைல்கல் வீரர் ஆனார். “600 போட்டிகள் ஆட வேண்டும் என்றெல்லாம் நான் நினைத்து ஆடவில்லை. நான் ஆடிக்கொண்டிருந்தேன் 600 என் வழியில் வந்தது.இது வரை இதை மகிழ்வுடன் ஆடி வருகிறேன்” என்றார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Pollard

    அடுத்த செய்தி