இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டியை பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஆந்தோணி அல்பனிஸ் உடன் சேர்ந்து பார்க்கவுள்ளார்.
ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனிஸ் 4 நாள் சுற்றுப்பயணமாக நேற்று இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். அவருடன் அமைச்சர்கள் உள்ளிட்ட 27 பேர் கொண்ட குழு வந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இருந்து விமானம் மூலம் குஜராத் வருகை தந்த அந்நாட்டு பிரதமர் அல்பனிஸ்சுக்கு குஜராத் முதலமைச்சர் பூபேந்திர பாடேல் நேரில் சென்று வரவேற்றார்.பின்னர் இருவரும் நேற்று அண்ணல் காந்தி வசித்த சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட்டனர். அங்கு ஆஸ்திரேலிய பிரதமர் காந்தி சிலைக்கு மாலையிட்டு மரியாதை செய்தார். பின்னர் ஆளுநர் மாளிகைக்கு சென்ற பிரதமர் அல்பனிஸ் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் பங்கேற்றார்.
இந்நிலையில், பிரதமர் மோடியும் விமானம் மூலம் நேற்று இரவு அகமதாபாத்திற்கு வருகை தந்தார். இன்று தொடங்கும் டெஸ்ட் போட்டியை இரு தலைவர்களும் சிறிது நேரம் மைதானத்தில் அமர்ந்து ஒன்றாக பார்க்கவுள்ளனர். இரு நாட்டு தலைவர்களின் வருகையை ஒட்டி மைதனத்தை சுற்றி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரு அணிகளுக்கு இடையே இதுவகை 3 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ள நிலையில் இந்திய அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்றது. 3ஆவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. எனவே, தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. கடைசி டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றால், ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடிப்பதுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி விடும். இதனால் இந்த டெஸ்ட் போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Australia, Cricket match, Gujarat, India vs Australia, PM Modi