பிரதமர் மோடி கோரிக்கை வைத்தால் தோனி டி20 உலகக் கோப்பையில் விளையாட வாய்ப்பு - சோயப் அக்தர்

2021 டி20 உலகக் கோப்பையில் விளையாட வேண்டுமென பிரதமர் மோடி கோரிக்கை வைத்தால் தோனியால் அதை மறுக்க முடியாது என்று சோயப் அக்தர் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி கோரிக்கை வைத்தால் தோனி டி20 உலகக் கோப்பையில் விளையாட வாய்ப்பு - சோயப் அக்தர்
மோடி - தோனி
  • Share this:
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தோனியின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மட்டுமில்லாது கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

இந்த ஆண்டு நடைபெற இருந்த டி20 உலகக் கோப்பை ஒத்திவைக்கப்பட்டதால் தோனி ஓய்வு முடிவை விரைவில் அறிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தோனியின் ஒய்வு குறித்து பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் கருத்து தெரிவித்துள்ளார்.

Also Read : நடாஷாவிற்கு முத்தமிட்ட ஹர்திக் பாண்டியா புகைப்படம் - தளத்திலிருந்து நீக்கியது இன்ஸ்டாகிராம்


அதில், “தோனிக்கு ரசிகர்களின் ஆதரவு பெருமளவில் உள்ளது. அவர் 2021 டி-20 உலகக் கோப்பை தொடர் வரை விளையாடி இருக்கலாம். இருந்தாலும் ஓய்வு என்பது அவரது தனிப்பட்ட முடிவு.

இந்திய பிரதமர் மோடி தோனியிடம், 2021 டி-20 உலகக் கோப்பை வரை விளையாடலாம் என்று கோரிக்கை வைக்கலாம். அப்படி மோடி கோரிக்கை வைத்தால் அதை தோனியால் மறுக்க முடியாது. இதுபோன்று நிகழ்வுகள் பாகிஸ்தானிலும் நடைபெற்றுள்ளது. தோனி விரும்பினால் அவருக்கு விடைகொடுக்கும் போட்டி ஒன்றை நடத்தலாம்“ என்றும் சோயப் அக்தர் கூறியுள்ளார்.
First published: August 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading