சூர்ய குமார் போன்ற வீரர்கள் 100 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் கிடைப்பார்கள் என்று கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடி முடித்துள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் இருந்தன. இதனால் தொடரை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி நேற்று முன்தினம் நடந்தது.
இதில் இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் 112 ரன்களை அதிரடியாக குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். 45 பந்துகளில் சூர்ய குமார் சதம் அடித்து அசத்தினார். இதில் 9 சிக்சர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும். ஃபைன் லெக் திசையில் ஸ்கூப் ஷாட் மூலம் அவர் 3 சிக்சர்களை அடித்து கவனம் ஈர்த்தார்.
அவரை விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா, கவாஸ்கர் உள்பட பல்வேறு வீரர்கள் பாராட்டியுள்ளனர். சூர்யகுமார் பேட்டிங் குறித்து கபில்தேவ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- சில நேரங்களில் சூர்ய குமாரின் ஆட்டத்தை பாராட்ட வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாறியிருக்கிறேன். சச்சின், ரோகித் சர்மா, விராட் கோலியின் ஆட்டத்தை பார்க்கும்போது, இந்த வரிசையில் இன்னொரு வீரர் வரமாட்டாரா என்று எதிர்பார்ப்போம்.
அந்த வரிசையில் சூர்யகுமார்இணைந்திருக்கிறார். டி வில்லியர்ஸ், விவியன் ரிச்சர்ட்ஸ், சச்சின், விராட், ரிக்கி பான்டிங் போன்ற மிகச்சிறந்த வீரர்களை பார்த்திருக்கிறேன். அவர்களைப் போன்று மிகச்சில வீரர்களால்தான் சரியாக பந்தை அடிக்க முடியும்.
சூர்ய குமாருக்கு எனது பாராட்டுகள். அவரைப் போன்ற வீரர்கள் 100 ஆண்டுக்கு ஒருமுறைதான் வருவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
‘இந்திய அணியின் தேர்வுக்குழுவில் மருத்துவ வல்லுனர்கள் இடம்பெற வேண்டும்’ – கவாஸ்கர் வலியுறுத்தல்
20 ஓவர் போட்டிகளில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக சூர்யகுமார் உள்ளார். இவர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket