தோனி அணிந்த நம்பர் செவன் ஜெர்சிக்கும் ஓய்வளிக்க வேண்டும்... வீரர்களும், ரசிகர்களும் கோரிக்கை - ஏற்குமா பிசிசிஐ?

தோனி - விராட் கோலி

கிரிக்கெட் வரலாற்றில் அழியாப் புகழ் பெற்றுவிட்ட தோனி அணிந்த நம்பர் செவன் ஜெர்சிக்கும், ஓய்வளிக்கவேண்டு்ம் என வீரர்களும், ரசிகர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 • Share this:
  நம்மூர் தெருக்களில் ஆடும் பொடிசுகள் கூட தங்களுக்குப் பிடித்த வீரர்களின் ஜெர்சியை உடுத்தி வலம் வருகின்றனர். கிரிக்கெட் ரசிகர்கள் சாதனைகள் பல படைத்த சச்சின் டெண்டுல்கரின் நம்பர் 10 ஜெர்சியை அதிகம் அணிகின்றனர். இதுபோல் கால்பந்தில் காவியம் படைத்த அர்ஜென்டினாவின் மரடோனாவும் நம்பர் 10 ஜெர்சியை அணிந்தே ஆடினார். அவ்வகையில் உலகில் அதிகம் அணியப்படும் ஜெர்சியாக நம்பர் 10 விளங்குகிறது.

  2017ல் சச்சின் ஓய்வுபெற்ற பிறகு அறிமுக வீரர் ஷர்துல் தாகூர், நம்பர் டென் ஜெர்சியை அணிந்தபோது ரசிகர்கள் கொதித்தெழுந்துதனர். அதனால், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இல்லாத வகையில் நம்பர் 10 ஜெர்சிக்கு பிசிசிஐ நிரந்தர ஓய்வு அளித்து கவுரவித்தது.

  இந்நிலையில் சுதந்திர தினத்தன்று தன் ஓய்வு முடிவை தோனி அறிவித்ததைக். கேட்டு கிரிக்கெட் உலகமே அதிர்ந்தது. கிரிக்கெட் அறியாதவரையும் கிரிக்கெட் பார்க்க வைத்தவரும், இந்திய அணியை பல சாதனை சிகரங்களுக்கு இட்டுச் சென்றவருமான தோனியை கவுரவிக்கும் விதமாக அவர் அணிந்த ஜெர்சி நம்பர் செவனுக்கும் நிரந்தர ஓய்வு அளிக்கவேண்டும் என பரவலாக குரல் எழுந்துள்ளது .

  இதை முதன்முதலில் எழுப்பியவர் வேறு .யாருமல்ல. தோனியின் வரவால் விக்கெட் கீப்பிங் வாய்ப்பை நிரந்தரமாக இழந்த நம்மூர் தினேஷ் கார்த்திக்தான். தோனியுடன் தான் இடம்பெற்றிருக்கும் புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்டு, ஜெர்சி செவனுக்கும் ஓய்வு அளிக்கப்படும் என நம்புவதாக குறிப்பிட்டிருந்தார்.  அதை ஆமோதித்த இந்திய மகளிர் அணி கேப்டன் மித்தாலி ராஜ் , ஜெர்சி செவனுக்கு சாகாவரம் தந்தவர் தோனி என டிவீட் செய்துள்ளார். இவர்களைப் பார்த்து ரசிகர்களும் ஜெர்சி 7-க்கு ஓய்வு தரவேண்டும் எனக் கூறி நூற்றுக்கணக்கில் டிவீட் செய்துவருகின்றனர்.  இதனிடையே, தோனி அறிவித்ததுமே தனது ஓய்வுமுடிவையும் வெளியிட்ட மற்றொரு நட்சத்திர வீரரும் அவரது நெடுநாள் நண்பருமான ரெய்னா இருவரும் ஒருசேர அறிவிப்பு வெளியிட்ட காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதுவும் ஜெர்சி தொடர்புடையதாகவே உள்ளது.

  மேலும் படிக்க...கிரிக்கெட்டின் கதை, தோனி இல்லாமல் முடிவடையாது - பாகிஸ்தான் பந்து வீச்சாளர் சோயப் அக்தர்

  தோனியின் ஜெர்சி செவனையும், தனது ஜெர்சி எண்ணான த்ரீயையும் இணைத்தால் 73 என்ற எண் வருவதாக கூறியுள்ள ரெய்னா, அந்த எண் இந்தியா நிறைவு செய்த சுதந்திர தினங்களை குறித்ததால் அந்நாளில் ஓய்வை அறிவித்ததாக தெரிவித்துள்ளார். அப்போது இருவரும் கட்டிப்பிடித்து அழுததாகவும் ரெய்னா கூறியுள்ளார்.

  மேலும் படிக்க...தோனி ஜெர்சி நம்பர் 7, என் ஜெர்சி நம்பர் 3... ஆகஸ்ட் 15 ஓய்வு அறிவிக்க என்ன காரணம்? ரெய்னா சுவாரஸ்ய தகவல்  தேசிய அணியின் ஜெர்சியை அணிவது ஒவ்வொரு வீரரின் கனவு. ஆனால் மனம் கவர்ந்த நாயகர்கள் அணிந்த ஜெர்சியை யாரும் அணியக் கூடாது என ரசிகர்கள் விரும்புவது, கவுரங்களுக்கெல்லாம் சிகரம். மும்பையில் பிறந்தசரித்திர நாயகன் சச்சினுக்கு கிடைத்த கவுரவம் சாதாரண பின்னணியில் உதித்து ஜொலித்த "தல" தோனிக்கும் கிடைக்கவேண்டும் என்பதே உலகெங்கும் உள்ள ரசிகர்களின் விருப்பம்.
  Published by:Vaijayanthi S
  First published: