பேட்ட ஸ்டைலில் தோனிக்கு 3டி மோஷன் போஸ்டர்.. CSK ரசிகர்கள் கொண்டாட்டம்!

#IPL2019: #Thala #Dhoni is back, #CSKPARAAK 3D #MotionPoster | சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி ஆட்டத்தில் தோனியைப் பார்ப்பதற்காகவே சுமார் 12,000 ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் குவிந்தனர்.

Web Desk | news18
Updated: March 20, 2019, 7:22 PM IST
பேட்ட ஸ்டைலில் தோனிக்கு 3டி மோஷன் போஸ்டர்.. CSK ரசிகர்கள் கொண்டாட்டம்!
தோனிக்கு 3டி மோஷன் போஸ்டர்.
Web Desk | news18
Updated: March 20, 2019, 7:22 PM IST
‘பேட்ட’ பட ஸ்டைலில் தல தோனிடின் 3டி மோஷன் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

2019 ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடர் வரும் 23-ம் தேதி தொடங்க உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் தொடக்கப் போட்டியில் அவரது அணி, பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. தொடக்க போட்டிக்கான டிக்கெட்டுகளும் சில மணி நேரங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

MS Dhoni, தோனி
சேப்பாக்கத்தில் தோனி. (CSK)


ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக வலம் வரும் தோனிக்கு, சொந்த ஊர் சென்னைதான் என்று அவர் சொல்லும் அளவுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே இங்கு உள்ளது.

ஒரு சில நாட்களுக்கு முன்பு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி ஆட்டத்தில் தோனியைப் பார்ப்பதற்காகவே சுமார் 12,000 ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் குவிந்தனர். அந்த அளவுக்கு தோனிக்கு ஏராளமான தீவிர ரசிகர்கள் சென்னையில் உள்ளனர்.

MS Dhoni, தோனி
வலைப்பயிற்சியில் தோனி. (CSK)


இந்நிலையில், ‘CSK பராக்’ என்ற தலைப்பில் ‘பேட்ட’ பட ஸ்டைலில் தோனிக்கு பிரத்யேகமான மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

Dhoni CSK Motion Poster
தோனிக்கு 3டி மோஷன் போஸ்டர்.


பேட்ட மோஷன் போஸடரில் ரஜினிக்கு எப்படி உருவாக்கினார்களோ அதேபோல் தோனிக்கும் செம கெத்தாக 3டி மோஷன் போஸ்டரை உருவாக்கியுள்ளனர்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எனது வாழ்நாளின் மிகக் கடினமான ஒரே நிகழ்வு இதுதான்- தோனி உருக்கம்!

Also Watch...

First published: March 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...