கிரிக்கெட் வீரர் பியூஷ் சாவ்லாவின் தந்தை கொரோனா பாதிப்பால் காலமானார்!

தந்தையுடன் பியூஷ் சாவ்லா

தந்தை இல்லாமல் இனி என் வாழ்க்கை பழைய மாதிரி இருக்காது. என்னுடைய வலிமையின் தூணை இன்று இழந்துவிட்டேன்” என தலைப்பிட்டு தந்தையின் மரண செய்தியை கூறியிருக்கிறார் பியூஷ் சாவ்லா, .

  • Share this:
இந்திய கிரிக்கெட் வீரர் பியூஷ் சாவ்லாவின் தந்தை கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மரணம் அடைந்தார்.

2011ம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பிடித்தவரும், சுழற்பந்து வீச்சாளருமான பியூஷ் சாவ்லா உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார். ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்காக ஆடிய பியூஷ் சாவ்லா கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்திருந்தார். இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்தார்.

இந்நிலையில் பியூஷ் சாவ்லாவின் தந்தை தந்தை பிரமோத் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். கொரோனா மற்றும் தொடர்பான சிகிச்சையில் இருந்து வந்த பியூஷ் சாவ்லாவின் தந்தை பிரமோத் குமார் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தந்தையின் மரணம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள பியூஷ் சாவ்லா, தந்தை இல்லாமல் இனி என் வாழ்க்கை பழைய மாதிரி இருக்காது. என்னுடைய வலிமையின் தூணை இன்று இழந்துவிட்டேன்” என தலைப்பிட்டு தந்தையின் மரண செய்தியை கூறியிருக்கிறார்.

பியூஷ் சாவ்லா வெளியிட்டுள்ள பதிவில், “ஆழ்ந்த வருத்தத்துடன், எனது அன்புக்குரிய தந்தை திரு பிரமோத் குமார் சாவ்லா இன்று பரலோக வாசஸ்தலத்திற்கு எங்களை பிரிந்து சென்றுவிட்டார் என்பதை கூறுகிறேன். அவர் கொரோனா மற்றும் கொரோனாவுக்கு பிந்தைய சிக்கல்களை சந்தித்து வந்தார். இந்த கடினமான காலங்களில் உங்கள் அன்பான எண்ணங்களையும் பிரார்த்தனைகளையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். அவருடைய உன்னத ஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும்” என கூறியுள்ளார்.

 
பியூஷ் சாவ்லாவின் தந்தை மறைவுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இன்று காலை தனது தந்தை திரு. பிரமோத் குமார் சாவ்லாவை இழந்த பியூஷ் சாவ்லாவுக்கு எங்கள் எண்ணங்கள் செல்கின்றன. இந்த கடினமான நேரத்தில் நாங்கள் உங்களுடன் மற்றும் உங்கள் குடும்பத்தினருடன் இருக்கிறோம். வலுவாக இருங்கள்.” என கூறியுள்ளது.இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “எனது அன்பு சகோதரர் பியூஷ் சாவ்லாவின் தந்தை, பிரமோத் மாமா இப்போது இல்லை. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். இந்த கடினமான நேரத்தை நீங்கள் பொறுமையுடன் செல்லுமாறு நான் பிரார்த்திக்கிறேன். மாமா ஒரு பெரிய ஆன்மா, அவரின் வாழ்க்கை முழுமையானது. கொரோனா இன்னும் ஒரு உயிரை எடுத்துள்ளது!” என தெரிவித்துள்ளார்.பியூஷ் சாவ்லா தந்தை மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட விளையாட்டுத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Published by:Arun
First published: