• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • கொல்கத்தா டெஸ்ட் - இன்னிங்ஸ் வெற்றி பெறுமா இந்தியா...?

கொல்கத்தா டெஸ்ட் - இன்னிங்ஸ் வெற்றி பெறுமா இந்தியா...?

இந்திய அணி

இந்திய அணி

  • News18
  • Last Updated :
  • Share this:
    வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 347 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து, இரண்டாவது களமிறங்கிய வங்கதேசம் மீண்டும் தடுமாறியதால் இந்தியாவுக்கு இன்னிங்ஸ் வெற்றிவாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

    பகல்-இரவு டெஸ்ட் போட்டியான இது, கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. முதலில் ஆடிய வங்கதேச அணி, 106 ரன்களுக்குள் சுருண்டது. இதையடுத்து, களமிறங்கிய இந்தியா, முதல்நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் சேர்த்தது.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டத்தில், ராஹானே 51 ரன்களில் வெளியேறினார். இருந்த போதும், மறுமுனையில் பொறுப்பாக ஆடிய விராட் கோலி. டெஸ்ட் அரங்கில் தனது 27-வது சதத்தை பதிவு செய்தார்.

    இதன் மூலம் பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் சதத்தை பதிவு செய்த முதல் இந்திய வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரரானார். விராட் கோலி 136 ரன்களில் வெளியேறியதும் பின்வரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 347 ரன்கள் சேர்த்திருந்த போது, இந்திய அணி தனது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இதையடுத்து, 241 ரன்கள் பின்தங்கிய நிலையில், வங்கதேசம் அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. 13 ரன்களுக்குள் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.

    இரண்டாம் நாள் முடிவில் வங்கதேச அணி, 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்கள் சேர்த்தது. அந்த அணி, முன்னிலைபெற மேலும் 89 ரன்களை கடக்க வேண்டியுள்ளது. ஆனால், கைவசம் 4 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளன. எனவே, இந்திய அணி, இன்னிங்ஸ் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: