சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு தெலங்கானா எம்.எல்.ஏ எச்சரிக்கை

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு தெலங்கானா எம்.எல்.ஏ எச்சரிக்கை

டிஆர்எஸ் எம்.எல்.ஏ தனம் நாகேந்தர்

IPL 2021 | ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உள்ளூர் வீரர்களுக்கு வாய்பளிக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது

 • Share this:
  உள்ளூர் வீரர்களை அணியில் தேர்ந்தெடுங்கள் இல்லையென்றால் பெயரை மாற்றி கொள்ளுங்கள் என்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு தெலங்கானா ராஷ்டிரா ஜமதி எம்.எல்.ஏ தனம் நாகேந்தர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  ஐ.பி.எல் 2021 தொடருக்கான ஏலம் கடந்த 18-ம் தேதி சென்னையில் நடைபெற்று முடிந்தது. இந்த ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உள்ளூர் வீரர்களுக்கு வாய்பளிக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் குறித்து டி.ஆர்.எஸ் எம்.எல்.ஏ தனம் நாகேந்தர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.

  இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மாநிலத்தில் திறைமைவாய்ந்த கிரிக்கெட் வீரர்களுக்கு ஐ.பி.எல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாய்ப்பு வழங்கவில்லை. அணியின் தேர்விலும், ஏலத்தின் போதும் உள்ளூர் வீரர்கள் தவிர்க்கப்பட்டுள்ளனர். இந்தப் போக்கு தொடர்ந்தால் கிரிக்கெட் போட்டியை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். உள்ளூர் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும், தவறினால் எங்கள் மாநகர பெயரான ஹைதரபாத்தை அவர்கள் நீக்க வேண்டும்“ என்றுள்ளார்.
  Published by:Vijay R
  First published: