நிறவெறியைத் தூண்டும் விதமாகப் பேசிய விவகாரத்தில் பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அகமது-வின் மன்னிப்பை தென்னாப்ரிக்க வீரர் பெலுக்வாயோ ஏற்றுக்கொண்டார்.
தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, 3 விதமான தொடர்களில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் 3-0 என தென்னாப்ரிக்க அணி வெற்றி பெற்றது.
இதனை அடுத்து, நடந்த 5 போட்டிகளில் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் பாகிஸ்தானும், 2-வது போட்டியில் தென்னாப்ரிக்காவும் வெற்றி பெற்றுள்ளது. டர்பனில் நேற்று (ஜன.22) நடந்த 2-வது போட்டியில் தென்னாப்ரிக்க அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பெலுக்வாயோவை திட்டிய சர்பராஸ் அஹமது. (CricketSA)
போட்டியின்போது, தென்னாப்ரிக்க வீரர் பெலுக்வாயோவை பார்த்து நிறவெறித் தூண்டும் விதமாக பாகிஸ்தான் கேப்டனும், விக்கெட் கீப்பருமான சர்ஃபராஸ் அஹமது பேசி சர்ச்சையில் சிக்கினார். இந்த சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை (ஜன.25) பெலுக்வாயோவை நேரில் சந்தித்த சர்ஃபராஸ், நடந்த சம்பவத்துக்காக மன்னிப்பு கேட்டார். அதனை ஏற்றுக்கொண்ட பெலுக்வாயோ, அவரை மன்னித்துவிட்டதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து சர்ஃபராஸ் பதிவிட்ட ட்விட்டரில், “இன்று காலை (ஜன.25) பெலுக்வாயோவை நேரில் சந்தித்தேன். நடந்த சம்பவத்துக்காக மன்னிப்பு கேட்டேன். அவரும் மன்னித்துவிட்டதாக கூறினார். அதேபோல், தென்னாப்ரிக்க மக்களும் என்னை மன்னிப்பார்கள் என நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டு இருந்தார்.
சர்ஃபராஸ் மன்னிப்பு கேட்டாலும், ஐசிசி விதிமுறைகளுக்கு எதிராக அவர் பேசியுள்ளார். அதனால், ஐசிசி தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
ஓவல் மைதானத்தில் இந்திய அணிக்கு வித்தியாசமான வரவேற்பு!
Also Watch...
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.