பிரபல டென்னிஸ் வீராங்கனையை கத்தியால் குத்தியவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை!

#PetraKvitova: Man who stabbed #tennisstar jailed for eight years | கிவிட்டோவா அளித்த புகாரின்பேரில், ரேடிம் ஸோண்ட்ரா (33) என்ற நபர் கைது செய்யப்பட்டார்.

news18
Updated: March 27, 2019, 1:09 PM IST
பிரபல டென்னிஸ் வீராங்கனையை கத்தியால் குத்தியவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை!
பிரபல டென்னிஸ் வீராங்கனைக்கு கத்திக்குத்து.
news18
Updated: March 27, 2019, 1:09 PM IST
பிரபல டென்னிஸ் வீராங்கனையை கத்தியால் குத்தியவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் நட்சத்திர வீராங்கனை பெட்ரோ கிவிட்டோவா (29). செக் குடியரசைச் சேர்ந்த இவர், 2 முறை விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்றவர்.

Petra Kvitova Stabbed, பெட்ரோ கிவிட்டோவாடென்னிஸ் வீராங்கனை பெட்ரோ கிவிட்டோவா.

பராகுவேலில் இருந்து சுமார் 260 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிராஸ்தேஜோவ் பகுதியில் கிவிட்டோவா வசித்து வருகிறார். இவர் டென்னிஸ் பயிற்சியை முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்த கிவிட்டோவா தனது வீட்டை திறந்தபோது, உள்ளே இருந்த மர்ம நபர் அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளார்.

தான் பணம் தருவதாகவும், தன்னை எதுவும் செய்ய வேண்டாம் எனவும் கிவிட்டோவா கெஞ்சியுள்ளார். அதற்காக, சுமார் ரூ.30,000 பணமும் கொடுத்துள்ளார். அதன்பிறகு, அந்த மர்ம நபர் கிவிட்டோவாவின் இடது கையில் கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.

Petra Kvitova Stabbed, பெட்ரோ கிவிட்டோவா
கையில் காயத்துடன் பெட்ரோ கிவிட்டோவா.


இதுகுறித்து கிவிட்டோவா அளித்த புகாரின்பேரில், ரேடிம் ஸோண்ட்ரா (33) என்ற நபர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும், கிவிட்டோவிடம் பறித்த பணத்தை திரும்ப தரவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தக் கத்திக்குத்து சம்பவம் கடந்த 2016 டிசம்பரில் நடந்ததாக தெரியவந்துள்ளது.
Loading...
‘தலைநகரம் முழுதும் தல நகரமாய்’ - டெல்லி அணியை கிண்டலடித்த ஹர்பஜன் சிங்!

Also Watch...First published: March 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...